உள்ளடக்கத்திற்குச் செல்க

The Anger of God பற்றிய பைபிள் வசனங்கள்: Is averted upon confession of sin and repentance

12 வசனங்கள் · 43 அம்சங்கள்

Is averted upon confession of sin and repentance பற்றிய வசனங்கள்

  1. ஆனாலும், யெகோவா பலமுறை அவர்களை விடுவித்தார்; அவர்களோ அவருக்கு எதிராக தொடர்ந்து கலகத்திலே நாட்டம் கொண்டு, பாவஞ்செய்து விழுந்து போனார்கள்.

  2. ஆனாலும் அவர்களுடைய கதறுதலை யெகோவா கேட்டபோதோ, அவர்களுடைய துன்பத்தைக் கவனத்தில் கொண்டார்.

  3. அவர்களுக்காக யெகோவா தமது உடன்படிக்கையை நினைத்து, தமது உடன்படிக்கையின் அன்பினால் மனமிரங்கினார்.

  4. “நான் எப்பிராயீமின் அழுகுரலை நிச்சயமாகக் கேட்டிருக்கிறேன். ‘நீர் என்னை அடங்காத கன்றைப்போல் தண்டித்து பயிற்றுவித்தீர். நான் பயிற்றுவிக்கப்பட்டேன். என்னைப் புதுப்பியும், நான் திரும்பிவருவேன். ஏனெனில், நீரே என் இறைவனாகிய யெகோவா.

  5. நான் வழிதவறிப் போனபின், மனந்திரும்பினேன். எனக்கு விளங்கும் ஆற்றல் வந்தபின், என் மார்பில் அடித்துக்கொண்டேன். என் வாலிபத்தின் நிந்தையைச் சுமந்ததினால், நான் வெட்கப்பட்டு சிறுமைப்பட்டேன்.’

  6. எப்பிராயீம் என் அன்பு மகனும், நான் மகிழும் பிள்ளையும் அல்லவா? அவனுக்கு விரோதமாக நான் அடிக்கடி பேசினாலும், இன்னும் அவனை நினைவுகூருகிறேன். ஆகையினால் என் உள்ளம் அவனுக்காக ஏங்குகிறது. நான் அவன்மேல் அதிக இரக்கமாயிருக்கிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  7. ஆகையால், “இப்பொழுதேனும் நீங்கள் உபவாசித்து, அழுது புலம்பி, உங்கள் முழுமனதுடன் என்னிடம் திரும்புங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  8. உங்கள் உடைகளையல்ல, உங்கள் உள்ளத்தையே கிழியுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்; ஏனெனில் அவர் கிருபையும் கருணையும் உள்ளவர், கோபிக்கத் தாமதிக்கிறவர், அன்பு நிறைந்தவர்; பேரழிவை அனுப்பாமல் மனம் மாறுகிறவர்.

  9. யாருக்குத் தெரியும்? ஒருவேளை அவர் மனமாறி, அனுதாபங்கொண்டு, உங்களுக்குத் தனது ஆசீர்வாதத்தையும் தரக்கூடும். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்காக தானிய காணிக்கையையும் பானகாணிக்கையையும் நீங்கள் கொண்டுவரலாம்.

  10. நான் புறப்பட்டு என் தகப்பனிடத்திற்குத் திரும்பிப்போய், அவரிடம்: அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன்.

  11. நான் இனிமேலும் உம்முடைய மகன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவன் அல்ல; என்னை உமது கூலிக்காரர்களில் ஒருவனாக வைத்துக்கொள்ளும் எனச் சொல்வேன்’ என்று சொல்லிக்கொண்டான்.

  12. எனவே, அவன் எழுந்து தன் தகப்பனிடத்திற்குப் போனான். “அவன் வெகுதூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருக்கம் கொண்டான்; தகப்பன் ஓடிப்போய், தனது மகனைக் கைகளால் கட்டிப்பிடித்து முத்தமிட்டான்.