Skip to content

Ham

14 வசனங்கள் · 7 குடும்ப உறுப்பினர்கள்

Ham பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. நோவாவுக்கு 500 வயதான பின்பு சேம், காம், யாப்பேத் என்னும் மகன்களுக்குத் தகப்பனானான்.

  2. நோவாவுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்கள் இருந்தார்கள்.

  3. மழை தொடங்கிய அன்றே நோவாவும், அவன் மனைவியும், சேம், காம், யாப்பேத் என்னும் அவனுடைய மகன்களும், அவர்களுடைய மனைவிமாரும் பேழைக்குள் போனார்கள்.

  4. பேழையிலிருந்து வெளியேறிய நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களாவர். காம் கானானின் தகப்பன்.

  5. அப்பொழுது கானானின் தகப்பனான காம், தன் தகப்பனின் நிர்வாணத்தைக் கண்டு, வெளியே போய் தன் இரு சகோதரருக்கும் அதைத் தெரியப்படுத்தினான்.

  6. பெருவெள்ளத்திற்கு பிறகு நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களுக்கு, பிறந்த மகன்களின் வம்சவரலாறு.

  7. காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.

  8. அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும், தங்கள் நாடுகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் குடியிருந்த காமின் மகன்கள் இவர்களே.

  9. நோவாவின் மகன்கள்: சேம், காம், யாப்பேத்.

  10. காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.

  11. அவர் எகிப்தின் எல்லா மூத்த மகன்களையும் காமின் கூடாரங்களில் அவர்களுக்கு பிறந்த மூத்த மகன்களையும் அழித்தார்.

  12. அப்பொழுது இஸ்ரயேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் நாட்டில் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனைப்போல் வாழ்ந்தான்.

  13. இவர்கள் எகிப்தியர் மத்தியில் அற்புத அடையாளங்களையும், காமின் நாட்டிலே அதிசயங்களையும் செய்தார்கள்.

  14. காமின் நாட்டிலே அற்புதங்களையும், செங்கடலிலே பிரமிக்கத்தக்க செயல்களையும் செய்தவரை மறந்தார்கள்.