உள்ளடக்கத்திற்குச் செல்க

Rulers பற்றிய பைபிள் வசனங்கள்: Character and qualifications of

77 வசனங்கள் · 5 அம்சங்கள்

Character and qualifications of பற்றிய வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. “ஆதலால் பார்வோன் விவேகமும், ஞானமுமுள்ள ஒரு மனிதனைத் தேடி, எகிப்து நாட்டுக்கு அவனைப் பொறுப்பாக நியமிப்பாராக.

  2. ஆகவே இஸ்ரயேலருக்குள் திறமையுள்ள மனிதரைத் தெரிந்தெடுத்து, அவர்களை ஆயிரம்பேருக்கும், நூறுபேருக்கும், ஐம்பதுபேருக்கும், பத்துப்பேருக்கும் மேலாக அதிகாரிகளாக நியமிக்கவேண்டும். இவர்கள் இறைவனுக்குப் பயப்படுகிறவர்களாகவும், நீதியற்ற ஆதாயத்தை வெறுக்கிற நம்பத்தகுந்தவர்களாகவும் இருக்கவேண்டும்.

  3. இவர்களை எல்லா வேளைகளிலும் மக்களுக்கு நீதிபதிகளாக பணிசெய்யும்படி ஏற்படுத்து. ஆனால் ஒவ்வொரு கஷ்டமான வழக்குகளையும் அவர்கள் உன்னிடத்தில் கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும். இலகுவான வழக்குகளை அவர்கள் தாங்களே நியாயந்தீர்க்கலாம். அவர்கள் உன்னோடு உன் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதால் உனது சுமை இலகுவாகும்.

  4. “இலஞ்சம் வாங்கவேண்டாம், இலஞ்சம் பார்வையுள்ளவர்களைக் குருடராக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டுகிறது.

  5. ஆகவே நீங்கள் உங்கள் கோத்திரங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து ஞானமும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலும், மதிப்பும் பெற்றவர்களான சில மனிதரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை உங்கள் தலைவர்களாக நான் நியமிப்பேன்” என்றேன்.

  6. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பட்டணங்களிலும் உங்களுடைய கோத்திரங்கள் ஒவ்வொன்றுக்குமென நீதிபதிகளையும், அதிகாரிகளையும் நியமியுங்கள். அவர்கள் மக்களுக்கு நியாயமாகத் தீர்ப்புச்செய்யவேண்டும்.

  7. நீதியைப் புரட்டவேண்டாம். பட்சபாதம் காட்டவேண்டாம். இலஞ்சம் வாங்கவேண்டாம். இலஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களைக் குருடாக்கி, நீதியானவர்களின் வார்த்தைகளைத் தாறுமாறாக்குகிறது.

  8. நீதியைப் பின்பற்றுங்கள்; நீதியை மட்டுமே பின்பற்றுங்கள். அப்பொழுது நீங்கள் வாழ்ந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற அந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள்.

  9. “அந்நியனுக்கும், தந்தையற்றவனுக்கும், விதவைக்கும் நீதி வழங்காதிருக்கிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.

  10. இஸ்ரயேலின் இறைவன் என்னிடம் பேசி, இஸ்ரயேலின் கற்பாறையானவர் என்னிடம் சொன்னதாவது: ‘ஒருவன் நியாயத்துடன் மனிதர்களை அரசாளும்போதும், இறை பயத்துடன் ஆட்சி செய்யும்போதும்,

  11. அவன் காலையில் மேகங்களால் மூடப்படாத சூரியனின் ஒளியைப்போல் இருப்பான். பூமியிலிருந்து புல்லை முளைக்கச் செய்யும் மழையின் பின் தோன்றும் செழிப்பைப் போலவும் இருப்பான்.’

  12. எஸ்றாவாகிய நீயோ, உன்னிடம் இருக்கும் உனது இறைவனின் ஞானத்தின்படி, நதிக்கு மறுகரையில் இருக்கும் மக்களான உன் இறைவனின் சட்டங்களை அறிந்திருக்கும் யாவருக்கும் நீதி வழங்கும்படி, நீதிபதிகளையும், உப நீதிபதிகளையும் நியமி. அவற்றை அறியாத மக்களுக்கு நீ கற்பிக்க வேண்டும்.

  13. ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்; பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள்.

  14. பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள், நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள்.

  15. சாலொமோனின் சங்கீதம். இறைவனே, அரசனுக்கு உமது நியாயமான தீர்ப்பையும் இளவரசனுக்கு உமது நீதியையும் கொடும்.

  16. அப்பொழுது அவர் உமது மக்களை நீதியோடும், துன்பப்பட்ட உம்முடையவர்களை நேர்மை தவறாமலும் நியாயந்தீர்ப்பார்.

  17. மலைகள் அனைவருக்கும் செழிப்பை உண்டாக்கட்டும், குன்றுகள் நீதியின் பலனைக் கொண்டுவரட்டும்.

  18. மக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களை அவர் பாதுகாத்து, ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாற்றட்டும்; ஒடுக்குவோரை அவர் நொறுக்கிப்போடட்டும்.

  19. சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும், தலைமுறை தலைமுறையாக அவர்கள் உமக்குப் பயந்திருப்பார்கள்.

  20. அரசர் புல்வெட்டப்பட்ட வயலின்மேல் பொழியும் மழையைப்போலவும், பூமியை நீர்ப்பாய்ச்சும் மழைத்தூறலைப் போலவும் அரசரின் ஆட்சி புத்துணர்ச்சி அடையட்டும்.

  21. அவருடைய நாட்களில் நீதிமான்கள் செழிப்பார்கள்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.

  22. ஒரு கடலில் இருந்து மறுகடல் வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அரசர் ஆளுகை செய்யட்டும்.

  23. பாலைவன வாசிகள் அவருக்குமுன் பணிவார்கள்; அவருடைய பகைவர்கள் மண்ணை நக்குவார்கள்.

  24. தர்ஷீசு மற்றும் தூரத்து தீவுகளின் அரசர்கள் அவருக்கு காணிக்கைகளைக் கொண்டுவரட்டும்; ஷேபாவும், சேபாவின் அரசர்களும் அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கட்டும்.

  25. எல்லா அரசர்களும் அவரை வணங்கட்டும்; எல்லா நாடுகளும் அவருக்குப் பணிவிடை செய்யட்டும்.