உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. “வானத்தின் நான்கு திசைகளிலும் நான் உங்களைச் சிதறடித்தேன். ஆனால் இப்போது வாருங்கள்! வாருங்கள்! வடநாட்டிலிருந்து ஓடி வாருங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

  2. சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அவர் என்னைக் மகிமைப்படுத்திய பின், உங்களைச் சூறையாடின பிற மக்களுக்கு எதிராக என்னை அனுப்பியிருக்கிறார். ஏனெனில் உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.

  3. நான் நிச்சயமாய் என் கையை அவர்களுக்கு எதிராக உயர்த்துவேன். அவர்களின் அடிமைகள் அவர்களைச் சூறையாடுவார்கள். அப்பொழுது சேனைகளின் யெகோவாவே என்னை அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

  4. “சீயோன் மகளே, சத்தமிட்டு களிகூரு; இதோ, நான் வருகிறேன். உன் மத்தியில் வாழ நான் வருகிறேன்” என யெகோவா அறிவிக்கிறார்.

  5. “அந்நாளிலே அநேக நாடுகள் யெகோவாவிடம் இணைந்துகொள்வார்கள். அவர்களும் என் மக்களாவார்கள். அப்பொழுது நான் உன் நடுவில் வாழ்வேன். சேனைகளின் யெகோவாவே என்னை உன்னிடம் அனுப்பினார் என்பதை அப்பொழுது நீ அறிந்துகொள்வாய்.

  6. யெகோவா பரிசுத்த தேசத்திலே யூதாவை தம் உரிமைப் பங்காக்கி, திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார்.

  7. மனுக்குலமே, நீங்கள் யாவரும் யெகோவா முன்பாக அமைதியாய் இருங்கள். ஏனெனில் அவர் தம் பரிசுத்த இருப்பிடத்திலிருந்து எழுந்திருக்கிறார்.”

  8. அதன்பின் தலைமை ஆசாரியனான யோசுவா, யெகோவாவினுடைய தூதனின் முன்னிலையில் நிற்பதை யெகோவா எனக்குக் காட்டினார். யோசுவாவின்மேல் குற்றஞ்சாட்டுவதற்கு சாத்தானும் அவனுடைய வலதுபக்கத்தில் நின்றுகொண்டிருந்தான்.

  9. யெகோவா சாத்தானிடம், “சாத்தானே! யெகோவா உன்னைக் கடிந்துகொள்ளட்டும். எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கண்டிப்பாராக; இந்த யோசுவா நெருப்பிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட எரியும் கொள்ளியல்லவா” என்றார்.

  10. அப்பொழுது நான், “அவனுடைய தலையில் சுத்தமான தலைப்பாகையையும் வைத்தால் நல்லது என்றேன்.” எனவே அவர்கள் யெகோவாவின் தூதன் அங்கே நிற்கையில் ஒரு சுத்தமான தலைப்பாகையை அவனுடைய தலைமீது வைத்து, உடைகளை உடுத்தினார்கள்.

  11. அவ்வேளையில் யெகோவாவினுடைய தூதன் யோசுவாவுக்குக் கொடுத்த பொறுப்புகள்:

  12. “சேனைகளின் யெகோவா அறிவிப்பது இதுவே: ‘நீ என் வழிகளில் நடந்து நான் சொல்வதைச் செய்வாயானால் என் ஆலயத்தை நிர்வகித்து, என் முற்றங்களுக்கும் பொறுப்பாக இருப்பாய், இங்கு நிற்பவர்கள் மத்தியில் நான் உனக்கும் ஒரு இடத்தைத் தருவேன்.

  13. “ ‘தலைமை ஆசாரியனாகிய யோசுவாவே, நீயும் உன்னுடன் இருக்கும் ஆசாரியரும் கேளுங்கள்; வரப்போகும் நல்ல காரியங்களுக்கு அறிகுறியாயிருக்கிற நீங்களே கேளுங்கள். இதோ நான், என் அடியவராகிய கிளையைக் கொண்டுவரப் போகிறேன்.

  14. யோசுவாவின், முன்பாக நான் நிறுத்தி வைத்துள்ள கல்லைப் பாருங்கள். இந்த ஒரே கல்லில் ஏழு கண்கள் இருக்கின்றன, அதில் நானே ஒரு கல்வெட்டினைப் பொறிப்பேன்; இந்தத் தேசத்தின் பாவங்களை ஒரே நாளில் நீக்குவேன்’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.

  15. “ ‘அந்த நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் தன்தன் அயலானை உங்கள் திராட்சைக்கொடியின் கீழும், அத்திமரத்தின் கீழும் வந்து உட்கார்ந்து உங்கள் சமாதானத்திலும் செழிப்பிலும் பங்குகொள்ளும்படி அழைப்பீர்கள்,’ என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.”

  16. எனவே அவன் என்னிடம், “செருபாபேலுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: உன் வலிமையினாலும் அல்ல; உன் வல்லமையினாலும் அல்ல. என்னுடைய ஆவியானவராலேயே ஆகும்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.

  17. அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:

  18. “செருபாபேலின் கைகளே இந்த ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டன; அவனுடைய கைகளே இதைக் கட்டியும் முடிக்கும். அப்பொழுது சேனைகளின் யெகோவாவே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

  19. “இது சிறிய செயல்களின் நாளாய் இருந்தாலும் அதை அவமதிக்க வேண்டாம், ஏனெனில் இறைவன் தமது வேலையின் ஆரம்பத்திலும் மகிழ்ச்சிகொள்கிறார். செருபாபேலின் கையில் தூக்குநூலைக் காணும்போது மனிதர் யாவரும் அகமகிழ்வார்கள். நீ கண்ட இந்த ஏழு கண்களும் பூமியைச் சுற்றிப் பார்த்துக் கண்காணிக்கிற யெகோவாவின் கண்களாகும் என்றான்.”

  20. எனவே அவன், “இவர்கள் இருவரும் சர்வலோகத்திற்கும் ஆண்டவராக இருப்பவருக்கு ஊழியம் செய்யும்படி அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் என்றான்.”

  21. சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது, ‘நான் இந்த சாபத்தை வெளியே அனுப்புவேன், அப்பொழுது அது திருடன் வீட்டிலும், என் பெயரில் பொய் ஆணையிடுகிறவன் வீட்டிலும் நுழையும். அது அவன் வீட்டில் தங்கியிருந்து, அந்த வீட்டை அழிக்கும். அதன் மரவேலைப்பாடுகளும் கற்களுங்கூட முற்றிலும் அழிந்துவிடும் என்றான்.’ ”

  22. அதற்கு அந்தத் தூதன் என்னிடம், “இவை சர்வலோகத்திற்கும் ஆண்டவராக இருப்பவரின் முன்னின்று புறப்படுகிற வானத்தின் நான்கு காற்றுகளாகும்.

  23. திரும்பவும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.

  24. சேனைகளின் யெகோவா அறிவிப்பது இதுவே என நீ அவனிடம் சொல்: ‘கிளை என்னும் பெயரைக்கொண்டவர் இவரே; அவர், தான் இருக்குமிடத்திலிருந்து கிளைவிட்டு யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவார்.

  25. யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுகிறவர் அவரே. அவர் மாட்சிமையை அணிந்து, தம் அரியணையின்மேல் அமர்ந்திருந்து அரசனாக ஆட்சி செய்வார். அவ்வாறு அவர் தம் அரியணையில் ஒரு ஆசாரியனாகவும் இருப்பார். இந்த இரண்டு பணிகளுக்கும் இடையே ஒரு நல்லிணக்கம் இருக்கும்.’