உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அப்பொழுது ஆகாய் அவர்களிடம் சொன்னதாவது, “ ‘அப்படியே இந்த மக்களும், இந்த நாடு முழுவதும் என் பார்வையில் இருக்கிறார்கள்,’ என யெகோவா அறிவிக்கிறார். ‘அவர்கள் எதைச் செய்தாலும், அவர்கள் எதைச் செலுத்தினாலும் அவை எல்லாம் அவருக்கு அசுத்தமுள்ளதாய் இருக்கின்றன.

  2. “ ‘இப்போதாவது, இதை மிகக் கவனமாய் சிந்தியுங்கள். யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி, அஸ்திபாரம் போட்டும் ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்படும் முன்பு நிலைமை எவ்வாறு இருந்தது என சிந்தித்துப் பாருங்கள்.

  3. நான், நீங்கள் கையிட்டுச் செய்த பயிர்களை இலைசுருட்டி வியாதியினாலும், பூஞ்சண வியாதியினாலும், பனிக்கட்டி மழையினாலும் அழித்தேன். அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை,’ என யெகோவா அறிவிக்கிறார்.

  4. ‘யெகோவாவின் ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்த நாளிலிருந்து, ஒன்பதாம் மாதம் இருபத்து நான்காம் நாளாகிய இந்த நாள்வரை, நடந்தவற்றைக் கவனமாய் சிந்தித்துப் பாருங்கள்.

  5. களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் ஏதாவது மீதியாயிருக்கிறதா? திராட்சைக்கொடியும், அத்திமரமும், மாதுளஞ்செடியும், ஒலிவமரமும் இதுவரை காய்க்கவில்லையே. “ ‘ஆனால், இன்றுமுதல் உங்களை நான் ஆசீர்வதிப்பேன்.’ ”

  6. அம்மாதம் இருபத்து நான்காம் தேதியாகிய அதேநாளிலே, இரண்டாம் முறையும், இறைவாக்கினன் ஆகாய் என்பவனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது:

  7. “யூதாவின் ஆளுநரான செருபாபேலுக்கு நீ சொல்லவேண்டியதாவது, நான் வானத்தையும், பூமியையும் அசைப்பேன்.

  8. அரச அரியணைகளையும் கவிழ்ப்பேன். அந்நிய அரசுகளின் வல்லமையையும் சிதறடிப்பேன். தேர்களையும், அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப் போடுவேன்; குதிரைகளுடன் அதில் ஏறிச்செல்வோர் ஒவ்வொருவரும் தங்கள் சகோதரனின் வாளினால் வெட்டுண்டு விழுவார்கள்.

  9. “சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது, ‘என் பணியாளனாகிய செருபாபேலே! செயல்தியேலின் மகனே, அப்போது நான் உன்னை எடுத்து என் முத்திரை மோதிரத்தைப் போலாக்குவேன் என யெகோவா அறிவிக்கிறார், ஏனெனில் நானே உன்னைத் தெரிந்துகொண்டேன்,’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.”

  10. தரியு அரசனின் ஆட்சியில், இரண்டாம் வருடத்தின் எட்டாம் மாதத்தில், இறைவாக்கினன் சகரியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. இந்தச் சகரியா இத்தோவின் மகனான பெரகியாவின் மகன்.

  11. “யெகோவா உங்கள் முற்பிதாக்களின்மேல் கடுங்கோபம் கொண்டிருந்தார்.

  12. ஆதலால் மக்களுக்கு நீ சொல்லவேண்டியது: சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே; ‘என்னிடம் திரும்புங்கள்,’ அப்பொழுது நானும் உங்களிடத்தில் திரும்புவேன், என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.

  13. நீங்கள் உங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கவேண்டாம். முந்தைய இறைவாக்கினர்களும் அவர்களிடம், ‘உங்கள் பொல்லாத வழிகளையும், பொல்லாத செயல்களையும் விட்டுத் திரும்புங்கள்’ என சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால் அவர்களோ எனக்குச் செவிகொடுக்கவுமில்லை, என்னைப் பொருட்படுத்தவுமில்லை என யெகோவா அறிவிக்கிறார்.

  14. ஆனால் என் அடியவர்களான இறைவாக்கினருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளின்படியும், என் ஒழுங்குவிதிகளின்படியுமே உங்கள் முற்பிதாக்களுக்கு நடந்தது. “அதன்பின் அவர்கள் மனந்திரும்பி, ‘சேனைகளின் யெகோவா எங்கள் வழிகளுக்கும், செயல்களுக்கும் ஏற்றவாறு எங்களுக்குச் செய்திருக்கிறார். தாம் தீர்மானித்தபடி நீதியாகவே நமக்குச் செய்தார் என்றார்கள்.’ ”

  15. தரியு அரசன் ஆட்சி செய்த இரண்டாம் வருடத்தின் சேபாத் என்னும் பதினோராம் மாதம் இருபத்து நான்காம் தேதி, இறைவாக்கினன் சகரியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. இந்த சகரியா இத்தோவின் மகனான பெரெகியாவின் மகன்.

  16. அப்பொழுது நறுமண மரங்களின் இடையில் நின்றவர், “இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்து வரும்படி யெகோவாவினால் அனுப்பப்பட்டவர்கள்” என எனக்கு விளக்கினார்.

  17. அவர்கள் நறுமண மரங்கள் மத்தியில் நின்ற யெகோவாவின் தூதனிடம் போய், “நாங்கள் பூமியெங்கும் சுற்றிப் பார்த்தோம். முழு உலகமும் சமாதானமாயும், அமைதியாயும் இருப்பதைக் கண்டோம்” என்றார்கள்.

  18. அப்பொழுது யெகோவாவின் தூதன், “சேனைகளின் யெகோவாவே, எருசலேமின்மேலும், யூதாவின் நகரங்கள் மேலும் இன்னும் எவ்வளவு காலம் இரங்காதிருப்பீர்? எழுபது ஆண்டுகளாய் நீர் அவற்றின்மேல் கோபமாயிருந்தீரே” எனக் கேட்டான்.

  19. அதற்கு என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், யெகோவா அன்பும் ஆறுதலுமான வார்த்தைகளால் பேசினார்.

  20. அதன்பின்பு என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதன், “இந்த வார்த்தைகளை அறிவி: சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘நான் எருசலேமிலும், சீயோனிலும் வைத்த அதிக அன்பினால் வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.

  21. ஆனால் பாதுகாப்புடன் இருக்கிறோம் என எண்ணிக்கொண்டிருக்கும், பிற மக்கள்மீது நான் கடுங்கோபம் கொண்டுள்ளேன்; ஏனெனில் நான் எனது மக்கள்மேல் சிறிதளவு மட்டுமே கோபமாயிருந்தேன். அப்போது, பிற நாடுகளோ அவர்கள்மேல் பேராபத்தை அதிகரித்து எனது மக்களை அழிக்கப் பார்த்தார்கள்.’

  22. “ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: ‘நான் இரக்கத்தோடு எருசலேமுக்குத் திரும்புவேன்; அங்கே எனது ஆலயம் மறுபடியும் கட்டப்படும். எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்படும்’ என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.

  23. “மேலும் அறிவிக்க வேண்டியதாவது: சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘என் நகரங்கள் மீண்டும் செல்வச் செழிப்பினால் பொங்கி வழியும்; யெகோவா மறுபடியும் சீயோனைத் தேற்றி எருசலேமைத் தெரிந்துகொள்வார் என்றான்.’ ”

  24. அதன்பின் யெகோவா எனக்கு கைவினைஞர் நால்வரைக் காண்பித்தார்.

  25. நானே அதைச் சுற்றி அக்கினி சுவராயிருந்து, நானே அதற்குள்ளே அதன் மகிமையாகவும் இருப்பேன்’ என யெகோவா அறிவிக்கிறார்” என்றான்.