உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. இன்றுமுதல் என்றைக்கும் யெகோவாவைத் துதிப்போம். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.

  2. நான் யெகோவாவிடம் அன்பாயிருக்கிறேன், ஏனெனில் அவர் என் குரலைக் கேட்டார்; இரக்கத்திற்காக நான் கதறியதை அவர் கேட்டார்.

  3. அவர் எனக்குச் செவிகொடுத்தபடியால், நான் என் வாழ்நாளெல்லாம் அவரை வழிபடுவேன்.

  4. அப்பொழுது நான் யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுச் சொன்னதாவது: “யெகோவாவே, என்னைக் காப்பாற்றும்!”

  5. யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர்; நம்முடைய இறைவன் கருணை நிறைந்தவர்.

  6. யெகோவா கற்றுக்கொள்ளவிருக்கும் இருதயமுள்ளவர்களைப் பாதுகாக்கிறார்; நான் தாழ்த்தப்பட்டபோது, அவர் என்னை இரட்சித்தார்.

  7. என் ஆத்துமாவே, மீண்டும் நீ இளைப்பாறு; யெகோவா உனக்கு எவ்வளவு நல்லவராய் இருக்கிறார்.

  8. யெகோவாவே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து விடுவித்தீர்; என் கண்களைக் கண்ணீர் சிந்துவதிலிருந்தும், என் கால்களை இடறுவதிலிருந்தும் விடுவித்தீர்.

  9. நான் உயிருள்ளோரின் நாட்டிலே யெகோவாவுக்கு முன்பாக நடப்பேன்.

  10. யெகோவா எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் பதிலாக, நான் அவருக்கு எதைத்தான் கொடுப்பேன்?

  11. நான் இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திக்கொண்டு யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன்.

  12. நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக் கடன்களை அவருடைய மக்கள் எல்லாருக்கும் முன்பாக நிறைவேற்றுவேன்.

  13. யெகோவாவினுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது.

  14. யெகோவாவே, உண்மையாகவே நான் உமது பணியாளனாய் இருக்கிறேன்; நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாய் இருக்கிறேன்; என்னைக் கட்டியிருந்த சங்கிலியிலிருந்து நீர் என்னை விடுதலையாக்கினீர்.

  15. நான் உமக்கு ஒரு நன்றிக் காணிக்கையைப் பலியிட்டு, யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன்.

  16. நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக்கடனை, அவருடைய மக்கள் எல்லோருக்கும் சமுகத்தில் நிறைவேற்றுவேன்.

  17. எருசலேமே உன் நடுவில் யெகோவாவினுடைய ஆலய முற்றங்களில், நான் எனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவேன். அல்லேலூயா.

  18. நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்; மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.

  19. ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.

  20. யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

  21. “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இஸ்ரயேலர் சொல்வார்களாக.

  22. “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று ஆரோன் குடும்பத்தவரான ஆசாரியர்கள் சொல்வார்களாக.

  23. “அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் சொல்வார்களாக.

  24. நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து, விசாலமான இடத்தில் என்னை நடத்தினார்.

  25. யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?