உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; காணிக்கையை எடுத்துக்கொண்டு அவருடைய ஆலய முற்றத்திற்கு வாருங்கள்.

  2. அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்; பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள்.

  3. “யெகோவா ஆளுகிறார்” என்று நாடுகளின் மத்தியில் சொல்லுங்கள்; உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அது அசையாது; அவர் நாடுகளை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.

  4. யெகோவா வருகிறார், அதினால் அவருக்கு முன்பாக அனைத்துப் படைப்புகளும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்; ஏனெனில் அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியுடனும் மக்களை அவருடைய சத்தியத்தின்படியும் நியாயந்தீர்ப்பார்.

  5. யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்; தொலைவில் உள்ள தீவுகள் மகிழட்டும்.

  6. மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன; நேர்மையுடனும் நீதியுடனும் அவர் ஆளுகை செய்கிறார்.

  7. நெருப்பு அவருக்கு முன்சென்று, சுற்றிலுமுள்ள அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.

  8. யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவே மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன.

  9. வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கிறது; எல்லா நாடுகளும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.

  10. உருவச்சிலைகளை வணங்குகிற அனைவரும், விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்கள்; தெய்வங்களே, நீங்களெல்லோரும் யெகோவாவையே வழிபடுங்கள்.

  11. யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினால் சீயோன் கேட்டுக் களிகூருகிறது; யூதாவின் கிராமங்களும் மகிழ்கின்றன.

  12. யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்; எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக நீரே உயர்த்தப்பட்டிருக்கிறீர்.

  13. யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்; ஏனெனில் அவர் தமக்கு உண்மையுள்ளோரின் உயிர்களைக் காப்பாற்றி, கொடியவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார்.

  14. நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள், அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள்.

  15. சங்கீதம். யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஏனெனில் அவர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமுமே இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது.

  16. யெகோவா தமது இரட்சிப்பைத் தெரியப்படுத்தி, தமது நீதியைப் பிறநாடுகளின் கண்முன்னே வெளிப்படுத்தினார்.

  17. அவர் இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் கொண்டிருந்த தமது அன்பையும் உண்மையையும் நினைவில்கொண்டார்; பூமியின் எல்லைகள் எல்லாம் நமது இறைவனுடைய இரட்சிப்பைக் கண்டன.

  18. பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் யெகோவாவை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டு களிப்புடன் இசையோடு பாடுங்கள்.

  19. யாழோடு யெகோவாவுக்கு இசை பாடுங்கள்; யாழோடும், கீதசத்தத்தோடும்,

  20. எக்காளங்களோடும், கொம்பு வாத்திய முழக்கங்களோடும் யெகோவாவாகிய அரசரின்முன் மகிழ்ந்து பாடுங்கள்.

  21. அவை யெகோவாவுக்கு முன்பாகப் பாடட்டும்; ஏனெனில், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியுடனும், நாடுகளை நேர்மையுடனும் நியாயந்தீர்ப்பார்.

  22. யெகோவா ஆட்சி செய்கிறார், நாடுகள் நடுங்கட்டும்; அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; பூமி அதிரட்டும்.

  23. சீயோனிலே யெகோவா பெரியவர்; அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.

  24. பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்; அவர் பரிசுத்தமானவர்.

  25. அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்; நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்; நீர் யாக்கோபில் நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர்.