Skip to content
1 நாளாகமம் 12:23-40

1 நாளாகமம் 12:23-40

23
யெகோவா சொன்னபடி சவுலின் அரசாட்சியை தாவீதுக்கு கொடுப்பதற்காக, எப்ரோனில் இருந்த தாவீதிடம் வந்த இராணுவவீரர்களின் எண்ணிக்கைகள்:
24
யூதாவின் மனிதரில் கேடயமும் ஈட்டியும் பிடித்து, போருக்கு வந்தவர்கள் 6,800 பேர்;
25
சிமியோனின் மனிதரில் போருக்கு ஆயத்தமாக வந்த வீரர்கள் 7,100 பேர்.
26
லேவியரின் மனிதரில் 4,600 பேர்.
27
இவர்களுடன் ஆரோன் குடும்பத்தின் தலைவனான யோய்தாவோடு சேர்த்து 3,700 மனிதர்கள் ஆவர்.
28
அதோடு சாதோக் என்னும் வலிமைமிக்க வாலிபனான வீரனும், அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த இருபத்திரண்டு அதிகாரிகளும் ஆவர்.
29
பென்யமீனியரில் சவுலின் குடும்பத்தில் 3,000 மனிதர்கள். அவர்களில் பலர் அதுவரை சவுலின் குடும்பத்திற்கே உண்மையாயிருந்தனர்.
30
எப்பிராயீமின் மனிதரில் வலிமைமிக்க வீரர்களும், தங்கள் சொந்த வம்சத்தில் புகழ் பெற்றவர்களும் 20,800 பேர்.
31
மனாசேயின் பாதிக்கோத்திரத்து மனிதரில் தாவீதை அரசனாக்குவதற்கு வரும்படி பெயர் குறிக்கப்பட்டவர்கள் 18,000 பேர்.
32
இசக்காரின் மனிதரிலிருந்து வந்த தலைவர்கள் 200 பேர். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த உறவினருடன் வந்தார்கள். அவர்கள் காலத்தை விளங்கி இஸ்ரயேல் மக்கள் எதைச் செய்யவேண்டும் என்பதையும் அறிந்திருந்தனர்.
33
செபுலோன் மனிதர்களில் போருக்கு ஆயத்தமாக எல்லாவித ஆயுதங்களையும் உபயோகித்து, அணிவகுத்து நிற்க அனுபவம் பெற்றிருந்தவர்களும், அரசன் தாவீதுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தவர்களும் 50,000 பேர்.
34
நப்தலியின் மனிதரில் 1,000 அதிகாரிகளும், அவர்களுடன் கேடயமும் ஈட்டியும் வைத்திருக்கும் 37,000 பேரும்,
35
தாண் மனிதரில் போருக்கு ஆயத்தமாய் இருந்தவர்கள் 28,600 பேர்,
36
ஆசேரின் மனிதர்களில் அனுபவம் வாய்ந்த போர்வீரர்களும், போருக்கு ஆயத்தமாக இருந்தவர்களும் 40,000 பேர்.
37
யோர்தானுக்குக் கிழக்கே ரூபன், காத், மனாசேயின் பாதிக்கோத்திரத்து மனிதரில் எல்லாவித ஆயுதங்களையும் தாங்கியவர்கள் 1,20,000 பேர்.
38
இவர்கள் எல்லோரும் தாவீதின் படையில் பணிசெய்ய தாமாகவே முன்வந்த இராணுவவீரர்கள். இவர்கள் தாவீதை முழு இஸ்ரயேலரின் அரசனாக்குவதற்காக முழுமனதுடன் எப்ரோனுக்கு வந்தவர்கள். மற்ற இஸ்ரயேல் மக்களும் தாவீதை அரசனாக்குவதற்கு ஒரே மனதுடையவர்களாயிருந்தனர்.
39
அந்த மனிதர்கள் தாவீதுடன் தங்கி மூன்று நாட்களுக்கு சாப்பிட்டுக் குடித்தனர். அவர்களின் குடும்பத்தினர்களே தேவையான பொருட்களை ஆயத்தம் செய்திருந்தனர்.
40
அதோடு தூரத்திலிருந்து இசக்கார், செபுலோன், நப்தலி மக்களும் கழுதைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், மாடுகள்மேல் உணவு வகைகளை எல்லாம் ஏற்றிக்கொண்டு வந்தனர். மாவு, அத்திப்பழ அடைகள், கொடிமுந்திரிகை வற்றல்கள், திராட்சை இரசம், எண்ணெய் போன்ற உணவு வகைகளுடன் ஆடுமாடுகள், செம்மறியாடுகளும் அதிகமாகக் கொண்டுவரப்பட்டன. அதனால் இஸ்ரயேலில் மகிழ்ச்சியுண்டாயிற்று.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options