Tyre பற்றிய பைபிள் வசனங்கள்: Strongly fortified
Strongly fortified பற்றிய வசனங்கள்
தொடர்ந்து இந்த எல்லை ராமாவை நோக்கி, பின் திரும்பி அரணிடப்பட்ட நகரான தீருவுக்குச் சென்றது. அங்கிருந்து ஒசாவை நோக்கித் திரும்பி அக்சீப்,
அதன்பின் தீரு என்னும் கோட்டைப் பக்கமாகவும், ஏவியர், கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் சென்றார்கள். கடைசியாக யூதாவின் நெகேவிலுள்ள பெயெர்செபாவுக்குப் போனார்கள்.
பின்பு அவர்கள் உன்னைக்குறித்து புலம்பல் வைத்து, “ ‘கடல் மனிதர்களால் நிறைந்து பேர்பெற்ற நகரமே, நீ எவ்வளவாய் அழிந்துபோனாய்? நீயும் உன் குடிமக்களும் கடலில் வலிமையுடையவர்களாய் இருந்தீர்கள். அங்கு வாழ்ந்தவர்களையெல்லாம் நீங்கள் திகிலடையச் செய்தீர்களே!
தீரு தனக்கென ஒரு அரணைக் கட்டியிருக்கிறாள். அவள் வெள்ளியைத் தூசியைப்போலவும், தங்கத்தை வீதியின் அழுக்கைப்போலவும் குவித்து வைத்திருக்கிறாள்.