Spiritual Peace பற்றிய பைபிள் வசனங்கள்: God is the God of
God is the God of பற்றிய வசனங்கள்
சமாதானத்தையும் அமைதியையும் கொடுக்கும் இறைவன் உங்கள் அனைவருடனும் இருப்பாராக” ஆமென்.
கடைசியாக பிரியமானவர்களே, நான் விடைபெறுகிறேன். மகிழ்ச்சியாயிருங்கள். முழுநிறைவான வாழ்வுக்கு முயற்சியுங்கள். நான் சொன்னவற்றைக் கவனித்துக் கேளுங்கள். ஒரே மனதுடையவர்களாய் இருங்கள். சமாதானமாய் வாழுங்கள். அப்பொழுது அன்புக்கும், சமாதானத்திற்கும், அமைதிக்கும் உரியவரான இறைவன் உங்களுடனே இருப்பார்.
சமாதானத்தின் இறைவன் தாமே முற்றிலுமாய் உங்களைப் பரிசுத்தப்படுத்துவாராக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது, உங்களுடைய ஆவி, ஆத்துமா, உடல் முழுவதும் குற்றமற்றதாய் காக்கப்படுவதாக.
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே, ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் இறைவன்,