Skip to content

Philosophy பற்றிய பைபிள் வசனங்கள்

90 வசனங்கள் · 5 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. “ஆனாலும் நான், இறைவனைத் தேடி, அவருக்குமுன் எனது வழக்கை வைத்திருப்பேன்.

  2. அவர் ஆராய முடியாத அதிசயங்களையும், கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார்.

  3. பூமிக்கு மழையைக் கொடுக்கிறவர் அவரே; நாட்டுப்புறங்களுக்குத் தண்ணீரை அனுப்புகிறவரும் அவரே.

  4. அவரே தாழ்மையானவர்களை உயர்த்தி, துயரத்தில் இருப்பவர்களையும் பாதுகாத்து உயர்த்துகிறார்.

  5. அவர் தந்திரமானவர்களின் கைகளுக்கு வெற்றி கிடைக்காதபடி, அவர்களுடைய திட்டங்களை முறியடிக்கிறார்.

  6. இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார், தந்திரமுள்ளவர்களின் திட்டங்கள் தள்ளப்படுகின்றன.

  7. பகல் நேரத்தில் காரிருள் அவர்கள்மேல் வரும்; இரவில் தடவித்திரிவதுபோல் நண்பகலிலும் தடவித் திரிவார்கள்.

  8. இறைவன் ஒடுக்குவோரின் வாளிலிருந்து வறுமையுள்ளோரை விடுவித்து, வன்முறையாளரின் கையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.

  9. ஆதலால் ஏழைகளுக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு, அநீதி தன் வாயை மூடும்.

  10. “இறைவனால் திருத்தப்படுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்; எனவே எல்லாம் வல்லவரின் கண்டிப்பை நீ அசட்டை பண்ணாதே.

  11. அவர் காயப்படுத்திக் காயத்தைக் கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.

  12. ஆறு பெரும் துன்பங்களிலும் உன்னைக் கைவிடாமல் காப்பார்; அவை ஏழானாலும் ஒரு தீமையும் உன்மேல் வராது.

  13. பஞ்சத்தில் சாவிலிருந்தும் யுத்தத்தின் வாளுக்கு இரையாகாமலும் விலக்கிக் காப்பார்.

  14. நான் இறைவனிடம், நீர் என்னைக் குற்றவாளியாகத் தீர்க்காதிரும், எனக்கெதிராக என்ன குற்றச்சாட்டு உண்டு என எனக்குச் சொல்லும் எனக் கேட்பேன்.

  15. கொடியவர்களின் சூழ்ச்சிகளைப் புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டு, உமது கைகளினால் நீர் படைத்த என்னை ஒடுக்குவது உமக்குப் பிரியமாயிருக்கிறதோ?

  16. உமக்கு மானிடக் கண்கள் உண்டோ? நீர் மனிதன் பார்ப்பதுபோல் பார்க்கிறீரோ?

  17. உமது நாட்கள் மனிதனின் நாட்களைப்போலவும், உமது வருடங்கள் பலவானுடைய வருடங்களைப்போலவும் இருக்கிறதோ?

  18. அதினால்தானோ நீர் எனது தவறுதல்களைத் தேடுகிறீர்? எனது பாவங்களைத் துருவி ஆராய்கிறீர்?

  19. நான் குற்றமற்றவன் என்பது உமக்குத் தெரியும், உமது கையினின்று என்னை விடுவிக்க ஒருவராலும் முடியாது என்றும் தெரியும்.

  20. “உமது கரங்களே என்னை உருவாக்கிப் படைத்தன. இப்பொழுது திரும்பி என்னை நீர் அழிப்பீரோ?

  21. களிமண்ணைப்போல நீர் என்னை உருவாக்கியதை நினைத்துக்கொள்ளும். இப்பொழுது திரும்பவும் என்னைத் தூசிக்கே போகப்பண்ணுவீரோ?

  22. நீர் என்னைப் பால்போல வார்த்து வெண்ணெய்க் கட்டிபோல உறையச் செய்தீரல்லவோ?

  23. தோலையும் சதையையும் எனக்கு உடுத்தி, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை பின்னினீர் அல்லவோ?

  24. நீரே எனக்கு வாழ்வு கொடுத்து, எனக்கு இரக்கம் காட்டினீர், உமது தயவினால் என் ஆவியைக் காத்திருந்தீர்.

  25. “ஆனாலும் நீர் உமது இருதயத்தில் மறைத்து வைத்தது இதுவே, இது உமது மனதில் இருந்தது என்பதை நான் அறிவேன்.