Skip to content

Obed பற்றிய பைபிள் வசனங்கள்

14 வசனங்கள் · 5 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. அங்கு வாழ்ந்த பெண்கள், “நகோமிக்கு ஒரு மகன் கிடைத்திருக்கிறான்” என்று சொல்லி அவனுக்கு, “ஓபேத்” என்று பெயரிட்டார்கள். அவனே தாவீதின் தகப்பனான ஈசாயின் தகப்பன்.

  2. பேரேசின் குடும்ப அட்டவணை இதுவே: பேரேஸ் எஸ்ரோனின் தகப்பன்,

  3. எஸ்ரோன் ராமின் தகப்பன், ராம் அம்மினதாபின் தகப்பன்,

  4. அம்மினதாப் நகசோனின் தகப்பன், நகசோன் சல்மோனின் தகப்பன்,

  5. சல்மோன் போவாஸின் தகப்பன், போவாஸ் ஓபேதின் தகப்பன்,

  6. ஓபேத் ஈசாயின் தகப்பன், ஈசாய் தாவீதின் தகப்பன்.

  7. போவாஸ் ஓபேத்தின் தகப்பன், ஓபேத் ஈசாயின் தகப்பன்.

  8. சாபாத் எப்லாலின் தகப்பன்; எப்லால் ஓபேத்தின் தகப்பன்.

  9. ஓபேத் ஏகூவின் தகப்பன்; ஏகூ அசரியாவின் தகப்பன்.

  10. மெசோபாயா ஊரைச்சேர்ந்த எலியேல், ஓபேத், யாசியேல் என்பவர்களே.

  11. செமாயாவின் மகன்கள்: ஒத்னி, ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத் என்பவர்கள். அவர்களுடைய உறவினர்களான எலிகூ, செமகியா என்பவர்களும் ஆற்றல்மிக்கவர்களாய் இருந்தார்கள்.

  12. ஏழாம் வருடத்தில் யோய்தா தனது வல்லமையைக் காட்டினான். அவன் நூறுபேருக்குத் தளபதிகளாய் இருந்த யெரோகாமின் மகன் அசரியா, யோகனாவின் மகன் இஸ்மயேல், ஓபேதின் மகன் அசரியா, அதாயாவின் மகன் மாசெயா, சிக்ரியாவின் மகன் எலிஷாபாத் ஆகியோருடன் உடன்படிக்கை செய்தான்.

  13. சல்மோன் போவாஸின் தகப்பன், போவாஸினுடைய தாய் ராகாப், போவாஸ் ஓபேத்தின் தகப்பன், ஓபேத்தினுடைய தாய் ரூத், ஓபேத் ஈசாயின் தகப்பன்,

  14. தாவீது ஈசாயின் மகன், ஈசாய் ஓபேத்தின் மகன், ஓபேத் போவாஸின் மகன், போவாஸ் சல்மோனின் மகன், சல்மோன் நகசோனின் மகன்,