Skip to content

Hezron

13 வசனங்கள் · 9 குடும்ப உறுப்பினர்கள்

இவ்வாறும் அறியப்படுகிறார்: Esrom

Hezron பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. யூதாவின் மகன்கள்: ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள். கானான் நாட்டில் ஏர், ஓனான் என்பவர்கள் இறந்துபோனார்கள். பேரேஸின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

  2. பாரேஸின் சந்ததிகளாவன: எஸ்ரோன் மூலமாக எஸ்ரோனிய வம்சமும், ஆமூலின் மூலமாக ஆமூலிய வம்சமும் வந்தன.

  3. பேரேசின் குடும்ப அட்டவணை இதுவே: பேரேஸ் எஸ்ரோனின் தகப்பன்,

  4. எஸ்ரோன் ராமின் தகப்பன், ராம் அம்மினதாபின் தகப்பன்,

  5. பேரேஸின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.

  6. எஸ்ரோனின் மகன்கள்: யெராமியேல், ராம், காலேப்.

  7. எஸ்ரோனின் மகன் காலேப் எரீயோத் எனப்பட்ட தன் மனைவியாகிய அசுபாளின்மூலம் பெற்ற மகன்கள்: ஏசேர், ஷோபாப், அர்தோன்.

  8. பின்பு எஸ்ரோன் அறுபது வயதானபோது கீலேயாத்தின் தகப்பன் மாகீரின் மகளைத் திருமணம் செய்து அவளுடன் உறவுகொண்டான். அவள் அவனுக்கு செகூப்பைப் பெற்றாள்.

  9. எஸ்ரோன் காலேபின் ஊரான எப்பிராத்தாவில் இறந்தபின், அவனுடைய மனைவி அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தலைவனான அசூரைப் பெற்றாள்.

  10. எஸ்ரோனின் முதற்பேறான யெராமியேலின் மகன்கள்: முதற்பேறானவன் ராம், மற்றவர்கள் பூனா, ஓரேன், ஓத்சேம், அகியா.

  11. யூதாவின் சந்ததிகள்: பேரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.

  12. யூதா பாரேஸுக்கும் சாராவுக்கும் தகப்பன், அவர்களின் தாய் தாமார், பாரேஸ் எஸ்ரோமுக்குத் தகப்பன், எஸ்ரோம் ஆராமுக்குத் தகப்பன்,

  13. நகசோன் அம்மினதாபின் மகன், அம்மினதாப் ஆராமின் மகன், ஆராம் எஸ்ரோமின் மகன், எஸ்ரோம் பாரேஸின் மகன், பாரேஸ் யூதாவின் மகன்,