Skip to content

Michmash பற்றிய பைபிள் வசனங்கள்

6 வசனங்கள் · 5 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. சவுல் இஸ்ரயேலிலிருந்து மூவாயிரம் பேரைத் தெரிந்துகொண்டான். அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலுடன் மிக்மாசிலும், பெத்தேல் மலைநாட்டிலும் இருந்தார்கள். மற்ற ஆயிரம்பேர் யோனத்தானுடன் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்தார்கள். சவுல் மற்றவர்களை அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பிவிட்டான்.

  2. பெலிஸ்தியர் மூவாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரர்களோடும், கடற்கரை மணல்போன்ற எண்ணற்ற படை வீரர்களோடும் இஸ்ரயேலருடன் போரிடும்படி ஒன்றுகூடினார்கள். அவர்கள் போய் பெத் ஆவெனுக்குக் கிழக்கேயுள்ள மிக்மாசிலே முகாமிட்டார்கள்.

  3. அன்று இஸ்ரயேலர் மிக்மாசிலிருந்து ஆயலோன் மட்டும் பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தியபின் அவர்கள் களைப்படைந்திருந்தார்கள்.

  4. மிக்மாசின் மனிதர் 122 பேர்,

  5. கேபாவைச் சேர்ந்த பென்யமீனியரின் சந்ததிகள் மிக்மாஸ், ஆயா, பெத்தேலும், அதைச் சுற்றியுள்ள குடியிருப்புகளிலும் வாழ்ந்தார்கள்.

  6. அசீரியர் ஆயாத் பட்டணத்திற்குள் செல்கிறார்கள். மிக்ரோனு வழியாகப் போகிறார்கள் மிக்மாஷாவிலே தமது பொருட்களை வைக்கிறார்கள்.