Skip to content

Flattery பற்றிய பைபிள் வசனங்கள்

17 வசனங்கள் · 20 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. மேலும் அப்சலோம் அதிகாலையில் எழுந்து பட்டண வாசலுக்குச் செல்லும் பாதையோரத்தில் நிற்பான். யாராவது தன் முறையீட்டுடன் அரசனிடம் தீர்ப்பைக் கேட்க வரும்போது அப்சலோம் அவனைக் கூப்பிட்டு அவனிடம், “நீ எந்த பட்டணத்தான்?” என்று கேட்பான். அவன், “உமது அடியவன் இஸ்ரயேல் கோத்திரத்தைச் சேர்ந்தவன்” என்பான்.

  2. அப்பொழுது அப்சலோம் அவனிடம், “பார், உன் வழக்கு உண்மையும் தகுதியுமானது. ஆனால் உன் முறையீட்டை விசாரிக்க அரசனின் பிரதிநிதி ஒருவனும் இல்லையே.

  3. மேலும் அப்சலோம், நான் இந்த நாட்டின் நீதிபதியாய் நியமிக்கப்பட்டால், வழக்கோ முறையீடோ உள்ள அனைவரும் என்னிடம் வரலாம். நான் அவனுக்கு நியாயம் வழங்கும்படி பார்த்துக்கொள்வேன்” என்பான்.

  4. அத்துடன் யாராவது அப்சலோம் முன்வந்து வணங்கினால் அவன் தன் கையை நீட்டி அவனை அணைத்து முத்தமிடுவான்.

  5. இவ்விதமாகவே அப்சலோம் அரசனிடம் நீதி கேட்டு வரும் இஸ்ரயேலர் அனைவருக்கும் செய்து, இஸ்ரயேல் மக்களின் மனதைக் கவர்ந்தான்.

  6. நான் யாருக்கும் பட்சபாதம் காட்டவோ, எந்த மனிதனுக்கும் முகஸ்துதி செய்யவோ மாட்டேன்.

  7. நான் முகஸ்துதியில் திறமையுள்ளவனாய் இருந்தால், என்னைப் படைத்தவர் விரைவில் என்னை எடுத்துக்கொள்வாராக.

  8. யெகோவாவே, என் எதிராளிகளின் நிமித்தம் உம்முடைய நீதியில் என்னை வழிநடத்தும்; உமது வழியை எனக்கு முன்பாக நேராக்கும்.

  9. அவர்களுடைய வாயின் வார்த்தை ஒன்றைகூட நம்பமுடியாது; அவர்களுடைய இருதயம் அழிவினால் நிரம்பியிருக்கிறது; அவர்களின் தொண்டையோ திறந்திருக்கும் சவக்குழி; அவர்கள் தங்கள் நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள்.

  10. ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்; அவர்களுடைய உதடுகளால் முகஸ்துதி பேசி இருதயத்தில் வஞ்சனை வைத்திருக்கிறார்கள்.

  11. முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும் பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக.

  12. இவ்வாறு அவள் தனது வசப்படுத்தும் வார்த்தையினால் அவனை மயக்கி, அவள் தன் மிருதுவான பேச்சினால் அவனை தவறிழைக்கத் தூண்டினாள்.

  13. உடனேயே அவன் அவளுக்குப் பின்னே போனான்; வெட்டுவதற்காகக் கொண்டுபோகப்படும் மாட்டைப்போலவும் வலையில் விழப்போகும் மானைப்போலவும்

  14. தானாய் கண்ணிக்குள் பிடிபடும் பறவையைப் போலவும் அவன் போனான்; அது அம்பினால் தனது நெஞ்சைப் பிளந்து உயிரையே வாங்கிவிடும் என அறியாமல் போனான்.

  15. மாறாக, நற்செய்தி ஒப்படைக்கப்படுவதற்கு, இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களாக நாங்கள் பேசுகிறோம். நாங்கள் மனிதரை அல்ல, எங்கள் உள்ளங்களை சோதித்து அறிகிற இறைவனைப் பிரியப்படுத்தவே முயலுகிறோம்.

  16. நாங்கள் ஒருபோதும் உங்களைப் போலியாக புகழ்ந்து பேசவோ, மறைக்கப்பட்ட முகமூடி போட்டு பேராசையுடன் நடந்துகொள்ளவோ இல்லை. இதற்கு இறைவனே எங்களுக்கு சாட்சி.

  17. உங்களிடமிருந்தோ, வேறு எவரிடமிருந்தோ, நாங்கள் மனிதனால் வரும் புகழ்ச்சியைத் தேடவுமில்லை. நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர் என்ற முறையில், உங்களுக்கு ஒரு சுமையாய் இருந்திருக்கலாம்.