உள்ளடக்கத்திற்குச் செல்க

Feast of Tabernacles பற்றிய பைபிள் வசனங்கள்

56 வசனங்கள் · 5 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

  2. “ ‘ஐந்தாம் நாளில் ஒன்பது காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை குறைபாடற்றவையாயிருக்க வேண்டும்.

  3. காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.

  4. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

  5. “ ‘ஆறாம்நாளில் எட்டுக் காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.

  6. காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.

  7. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

  8. “ ‘ஏழாம்நாளில் ஏழு காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.

  9. காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.

  10. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

  11. “ ‘எட்டாம் நாளில் சபையைக் கூட்டுங்கள். அதில் வழக்கமான வேலை எதையும் செய்யவேண்டாம்.

  12. யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கையைக் கொண்டுவாருங்கள். ஒரு காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகள் ஆகியனவற்றை தகன காணிக்கையாக கொண்டுவாருங்கள். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.

  13. காளையுடனும், செம்மறியாட்டுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.

  14. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

  15. “ ‘அத்துடன், நீங்கள் நேர்ந்துகொண்டவைகளுடனும், உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகளோடும் உங்களுக்கு நியமிக்கப்பட்ட பண்டிகைகளில் இவைகளையும் யெகோவாவுக்கு ஆயத்தப்படுத்தவேண்டிய காணிக்கைகளாவன: தகன காணிக்கைகள், தானிய காணிக்கைகள், பானகாணிக்கைகள், சமாதான காணிக்கைகள் ஆகிய இவையே’ ” என்றார்.

  16. யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் மோசே இஸ்ரயேலருக்குச் சொன்னான்.

  17. நீங்கள் உங்கள் சூடடிக்கும் களத்திலிருந்தும், திராட்சை ஆலையிலிருந்தும் அவற்றின் பலனைச் சேர்த்தபின், ஏழுநாட்களுக்குக் கூடாரப்பண்டிகையைக் கொண்டாடுங்கள்.

  18. நீங்கள் இந்த பண்டிகையில் மகிழ்ச்சியாயிருங்கள். நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும் வேலைக்காரரும், வேலைக்காரிகளும், உங்கள் பட்டணங்களில் வாழ்கின்ற லேவியர், அந்நியர், தந்தையற்றவர்கள், விதவைகள் ஆகிய எல்லோருமே மகிழ்ந்திருங்கள்.

  19. யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு ஏழு நாட்கள் இந்தப் பண்டிகையை கொண்டாடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எல்லா அறுவடையிலும், உங்கள் கையின் வேலையிலும் உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் மகிழ்ச்சியும் நிறைவாயிருக்கும்.

  20. உங்கள் எல்லா ஆண்களும், உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் வருடத்திற்கு மூன்றுமுறை யெகோவாவுக்கு முன்பாக வரவேண்டும். புளிப்பில்லாத அப்பம் சாப்பிடும் பண்டிகை, வாரங்களின் பண்டிகை, கூடாரப்பண்டிகை ஆகிய இந்த மூன்று பண்டிகைகளுக்கும் இவ்வாறு வரவேண்டும். யெகோவாவுக்கு முன்பாக ஒருவரும் வெறுங்கையுடன் வரக்கூடாது.

  21. பின்பு மோசே அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “கடன்களை ரத்துச்செய்யும் வருடமாகிய ஒவ்வொரு ஏழாம் வருடத்தின் முடிவிலும் கூடாரப்பண்டிகைக் காலத்தில் இந்த சட்டத்தை மக்களுக்குமுன் வாசிக்கவேண்டும்.

  22. இஸ்ரயேலர் எல்லோரும் உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்திலே, அவருக்குமுன் வரும்போது, அவர்கள் கேட்கும்படியாக அவர்களுக்குமுன் இந்த சட்டத்தை நீங்கள் வாசிக்கவேண்டும்.

  23. ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், உங்கள் பட்டணத்தில் வசிக்கும் அந்நியர் ஆகிய மக்களை ஒன்றுகூட்டுங்கள். அவர்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பயந்துநடக்கவும், இந்த சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், கவனமாகக் கைக்கொள்ளவும் கற்றுக்கொள்வதற்காக இதைக் கேட்கும்படி ஒன்றுகூட்டுங்கள்.

  24. யெரொபெயாம் எட்டாம் மாதம் பதினைந்தாம் நாளில் யூதாவில் நடக்கும் ஒரு பண்டிகையைப்போல தானும் ஒரு பண்டிகையை நியமித்து, பலிபீடத்தில் பலிகளைச் செலுத்தினான். இப்படி அவன் தான் பெத்தேலில் செய்த கன்றுக்குட்டிக்குப் பலியிட்டான். பெத்தேலில் தான் செய்த மேடைகளில் பூசாரிகளையும் நியமித்தான்.

  25. எட்டாம் மாதம், பதினைந்தாம் தேதியை தன் விருப்பப்படி தெரிந்தெடுத்து, பெத்தேலில் தான் கட்டிய பலிபீடத்தில் பலிகளைச் செலுத்தினான். இப்படியாக இஸ்ரயேலருக்கான பண்டிகைகளை தானும் நியமித்து பலிகளைச் செலுத்தும்படி பலிபீடத்திற்குப் போனான்.