Skip to content

Feast of Tabernacles பற்றிய பைபிள் வசனங்கள்

56 வசனங்கள் · 5 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. “நீங்கள் விதைத்த உங்கள் வயலின் விளைச்சலின் முதற்பலனைக் கொண்டு, அறுவடைப் பண்டிகையைக் கொண்டாடுங்கள். “பின்பு ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், உங்கள் வயலின் விளைச்சலைச் சேர்க்கிற சேர்ப்பின் பண்டிகையைக் கொண்டாடுங்கள்.

  2. “கோதுமை அறுவடையின் முதற்பலன்களை கொண்டு, வாரங்களின் பண்டிகையையும், வருட முடிவில் தானிய சேர்ப்பின் பண்டிகையையும் கொண்டாடுங்கள்.

  3. “நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது, ‘ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளிலே யெகோவாவின் கூடாரப்பண்டிகை ஆரம்பமாகி, தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும்.

  4. முதலாம் நாள் பரிசுத்த சபைக்கூடும் நாள். அந்நாளில் வழக்கமான வேலையொன்றையும் செய்யவேண்டாம்.

  5. யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை ஏழுநாட்களுக்குக் கொண்டுவாருங்கள். எட்டாவது நாள் பரிசுத்த சபையைக் கூட்டி நெருப்பினால் யெகோவாவுக்குக் காணிக்கையைச் செலுத்துங்கள். அதுவே சபைக்கூடுதல் முடிவடையும் நாள். அந்நாளில் வழக்கமாகச் செய்யும் வேலையொன்றையும் செய்யக்கூடாது.

  6. “ ‘யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைகளைக் கொண்டுவருவதற்காக, பரிசுத்த சபைக்கூடுதல்களாக நீங்கள் பிரசித்தப்படுத்தும்படி யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே. இப்பண்டிகைகளில் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான தகன காணிக்கைகளும், தானியக் காணிக்கைகளும், பலிகளும், பான காணிக்கைகளும் கொண்டுவரப்பட வேண்டும்.

  7. இக்காணிக்கைகள் யாவும், யெகோவாவின் ஓய்வுநாள் காணிக்கைகளோடு கூடுதலாகக் கொடுக்க வேண்டியவையாகும். இவை உங்கள் கொடைகளோடும். நீங்கள் நேர்ந்துகொண்ட எதனோடும், நீங்கள் யெகோவாவுக்குக் கொடுக்கும் உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகள் அனைத்தோடும் கூடுதலாகக் கொடுக்கப்பட வேண்டியவைகளாகும்.

  8. “ ‘ஆகவே நீங்கள் நாட்டின் விளைச்சலைத் சேர்த்தபின், ஏழாம் மாதம் பதினைந்தாம்நாள் தொடங்கி, ஏழுநாட்களுக்கு யெகோவாவுக்கான இப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதலாம் நாள் ஓய்வுநாளாகும். எட்டாம் நாளும் ஓய்வுநாளாகும்.

  9. முதலாம் நாளிலே உங்கள் மரங்களிலிருந்து சிறந்த பழங்களையும், ஓலைகளையும், இலைகளுள்ள கொப்புகளையும், ஆற்றலறியையும் எடுத்துக்கொண்டு, ஏழு நாட்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா முன்னிலையில் களிகூருங்கள்.

  10. ஒவ்வொரு வருடமும் ஏழுநாட்களுக்கு யெகோவாவுக்குரிய பண்டிகையாக இதைக் கொண்டாடுங்கள். இது தலைமுறைதோறும் நிரந்தர நியமமாக இருக்கும். ஏழாம் மாதத்தில் இதைக் கொண்டாடுங்கள்.

  11. நீங்கள் ஏழுநாட்களுக்குக் கூடாரங்களில் வசியுங்கள். ஊரில் பிறந்த இஸ்ரயேலர் யாவரும் கூடாரங்களில் வசிக்கவேண்டும்.

  12. இவ்விதமாய் நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, அவர்களைக் கூடாரங்களில் வசிக்கச்செய்தேன் என்று உங்கள் சந்ததிகள் அறிந்துகொள்வார்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார்.

  13. “ ‘ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியும் ஒரு பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்நாளில் வழக்கமான வேலை எதையுமே செய்யக்கூடாது. ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகையைக் கொண்டாடவேண்டும்.

  14. அந்நாளில் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவர வேண்டும். பதின்மூன்று இளங்காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் தகன காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.

  15. அந்த பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுடனும், பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து அதைத் தானிய காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அந்த இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களில் ஒவ்வொன்றுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதமே ஆயத்தப்படுத்தவேண்டும்.

  16. பதினான்கு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்தில் ஒரு எப்பா அளவான மாவை அவ்விதமே செலுத்தவேண்டும்.

  17. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் கூடுதலாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

  18. “ ‘இரண்டாம் நாளில் பன்னிரண்டு இளங்காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாயிருக்க வேண்டும்.

  19. காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.

  20. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், அவற்றின் பானகாணிக்கைகளுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  21. “ ‘மூன்றாம் நாளில் பதினோரு காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.

  22. காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.

  23. வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

  24. “ ‘நான்காம் நாளில் பத்து காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் செலுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.

  25. காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.