Skip to content

Ethiopia பற்றிய பைபிள் வசனங்கள்: Desolation of

17 வசனங்கள் · 15 அம்சங்கள்

Desolation of பற்றிய வசனங்கள்

  1. எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால், இரைச்சலையுடைய செட்டைகளின் நாடே, ஐயோ உனக்குக் கேடு!

  2. இந்த நாடு நாணல் படகுகளில் தண்ணீரின்மேல் கடல் வழியாகத் தூதுவரை அனுப்புகிறது. விரைந்து செல்லும் தூதுவர்களே, உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும், தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடம் போங்கள். இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்; இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

  3. உலகத்தில் வாழ்பவர்களும், பூமியின் குடிமக்களே, நீங்கள் யாவரும் மலைமேல் கொடியேற்றப்படும்போது, அதைக் காண்பீர்கள். எக்காளம் முழங்கும்போது அதைக் கேட்பீர்கள்.

  4. யெகோவா என்னிடம் கூறுவது இதுவே: “சூரிய ஒளியின் இளஞ்சூட்டைப் போலவும், அறுவடைகால வெப்பத்தின்போது வரும் மூடுபனிபோலவும் நான் என்னுடைய உறைவிடத்தில் அமைதியாய் இருந்து பார்ப்பேன்.”

  5. ஏனெனில் அறுவடைக்குமுன், திராட்சை பூத்து, காய்த்து, பழங்களாகும்போது, யெகோவா எத்தியோப்பியரை தளிர்களாகவும், படரும் கிளைகளாகவும் அரிவாள்களால் வெட்டி அப்புறப்படுத்தி விடுவார்.

  6. அவையெல்லாம் இரைபிடிக்கும் மலைகளின் பிணந்தின்னும் பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் விடப்படும்; பிணந்தின்னும் பறவைகள் கோடைகாலத்திலும், காட்டு மிருகங்கள் மாரிகாலத்திலும் அவைகளைத் தின்னும்.

  7. யெகோவா ஆமோஸின் மகன் ஏசாயா மூலம் பேசினார்: அந்த வேளையில் அவர் ஏசாயாவிடம், “உனது இடுப்பில் இருக்கும் துக்கவுடையையும், உனது செருப்பையும் கழற்றிவிடு” என்றார். அவனும் அப்படியே செய்து உடையின்றி வெறுங்காலுடன் திரிந்தான்.

  8. பின்பு யெகோவா சொன்னதாவது: “எனது அடியவன் ஏசாயா உடையின்றியும், வெறுங்காலுடனும் மூன்று வருடங்கள் திரிந்திருக்கிறான். இது எகிப்திற்கும், எத்தியோப்பியாவிற்கும் விரோதமான முன்னெச்சரிப்பும் அடையாளமுமாகும்.

  9. இதேபோல் அசீரிய அரசன், எகிப்திய கைதிகளையும், நாடுகடத்தப்பட்ட எத்தியோப்பிய முதியோரையும் இளையோரையும் உடையின்றியும், வெறுங்காலுடனும், பின்பக்கம் மூடப்படாதவர்களாயும் கடத்திச் செல்வான். இவ்விதம் எகிப்து வெட்கமடையும்.

  10. அப்பொழுது எத்தியோப்பியாவில் நம்பிக்கை வைத்து, எகிப்தைக் குறித்து பெருமை பாராட்டியவர்கள், பயந்து வெட்கத்துக்குள்ளாவார்கள்.

  11. அந்த நாளிலே, இந்தக் கரையோரத்தில் வசிக்கும் மக்கள், ‘நாம் நம்பிக்கை வைத்தவர்களுக்கு என்ன நடந்திருக்கிறது பாருங்கள். அசீரிய அரசனிடமிருந்து விடுதலை பெறும்படி உதவிக்காக இவர்களிடமல்லவா ஓடினோம். அப்படியானால் நாம் எப்படித் தப்புவோம்?’ ” என்பார்கள்.

  12. எகிப்திற்கு விரோதமாக வாள் ஒன்று வரும், எத்தியோப்பியரின்மீது வேதனைகள் பெருகும். எகிப்திலே கொல்லப்படுவோர் விழும்போது அதனுடைய செல்வம் எடுத்துக்கொண்டு போகப்படும். அதனுடைய அஸ்திபாரங்களும் இடிக்கப்படும்.

  13. எத்தியோப்பியா, பூத், லீதியா, அரேபியா, லிபியா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களும், உடன்படிக்கை நாட்டின் மக்களும் எகிப்தியரோடுகூட வாளினால் சாவார்கள்.

  14. “ ‘யெகோவா கூறுவது இதுவே, “ ‘எகிப்தின் நட்பு நாடுகளும் விழும். அவளுடைய பெருமையான பெலன் குன்றிப்போகும். அவர்கள், மிக்தோல் தொடக்கம்முதல் அஸ்வான்வரையும் வாளினால் அவர்களுக்குள் வெட்டுண்டு கிடப்பார்கள் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.

  15. அவர்கள், பாழடைந்த நாடுகளுக்குள் பாழாய்ப் போவார்கள். அழிந்துபோன பட்டணங்களுக்குள், அவர்களுடைய பட்டணங்களும் அழிக்கப்படும்.

  16. நான் எகிப்திற்கு நெருப்பு வைக்கும்போதும், அதன் உதவியாளர்கள் நசுக்கப்படும்போதும் நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

  17. “ ‘அந்த நாளிலே பொய்யின்பம் கொண்டுள்ள எத்தியோப்பியரை அச்சுறுத்துவதற்காக என்னிடமிருந்து தூதுவர்கள் கப்பல்களில் போவார்கள். எகிப்து அழியும் நாளிலே, வேதனை அவர்களைப் பிடித்துக்கொள்ளும். நிச்சயமாகவே அந்த நாள் வருகிறது.