Skip to content

Abraham பற்றிய பைபிள் வசனங்கள்: Children of

10 வசனங்கள் · 39 அம்சங்கள்

Children of பற்றிய வசனங்கள்

  1. ஆகார், ஆபிராமுக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவனுக்கு ஆபிராம் இஸ்மயேல் என்று பெயரிட்டான்.

  2. ஆபிரகாமின் முதிர்வயதில் சாராள் கர்ப்பவதியாகி, இறைவன் வாக்குப்பண்ணியிருந்த அந்த குறித்த காலத்திலேயே, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள்.

  3. சாராள் தனக்குப் பெற்ற மகனுக்கு ஈசாக்கு என்று ஆபிரகாம் பெயரிட்டான்.

  4. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பெயருடைய இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தான்.

  5. அவள் ஆபிரகாமுக்குச் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்னும் மகன்களைப் பெற்றாள்.

  6. யக்க்ஷான் என்பவன் சேபா, தேதான் ஆகியோரின் தகப்பன். தேதானின் சந்ததிகள் அசூரிம், லெத்தூசீம், லெயூமீம் ஆகியோர்.

  7. ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா என்பவர்கள் மீதியானின் மகன்கள். இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள்.

  8. ஆபிரகாமின் மறுமனையாட்டி கேத்தூராள் பெற்ற மகன்கள்: சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா. யக்க்ஷானின் மகன்கள்: சேபா, தேதான்.

  9. மீதியானின் மகன்கள்: ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா. இவர்கள் அனைவரும் கேத்தூராளின் சந்ததிகள்.

  10. ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், ஈசாக்கின் மகன்கள்: ஏசா, இஸ்ரயேல்.