உள்ளடக்கத்திற்குச் செல்க

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 வசனங்கள் · 4 புத்தகங்கள் உள்ளடக்கப்பட்டன

இந்தக் காலத்தின் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. லூக்கா 3:20சுமார் கி.பி. 26

    இதனால் ஏரோது யோவானைச் சிறையில் அடைத்து, தான் செய்த தீய செயல்களுடன் இதையும் கூட்டிக் கொண்டான்.

  2. லூக்கா 3:21சுமார் கி.பி. 26

    இவ்வாறு எல்லா மக்களும் யோவானிடம் திருமுழுக்கு பெற்றபோது, இயேசுவும் வந்து திருமுழுக்கு பெற்றார். அவர் ஜெபம் செய்துகொண்டிருக்கையில், பரலோகம் திறக்கப்பட்டு,

  3. லூக்கா 3:22சுமார் கி.பி. 26

    பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போன்ற உருவம் கொண்டவராய் அவர்மேல் இறங்கினார். அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு குரல், “நீர் என்னுடைய அன்பு மகன், நான் உம்மில் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்” என்று உரைத்தது.

  4. லூக்கா 3:23சுமார் கி.பி. 26

    இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்தபோது, அவர் கிட்டத்தட்ட முப்பது வயதுடையவராய் இருந்தார். அவர் மக்கள் பார்வையில் யோசேப்பின் மகன் என்றே கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்,

  5. லூக்கா 3:24சுமார் கி.பி. 26

    ஏலி மாத்தாத்தின் மகன், மாத்தாத் லேவியின் மகன், லேவி மெல்கியின் மகன், மெல்கி யன்னாவின் மகன், யன்னா யோசேப்பின் மகன்,

  6. லூக்கா 3:25சுமார் கி.பி. 26

    யோசேப்பு மத்தத்தியாவின் மகன், மத்தத்தியா ஆமோசின் மகன், ஆமோஸ் நாகூமின் மகன், நாகூம் எஸ்லியின் மகன், எஸ்லி நங்காயின் மகன்,

  7. லூக்கா 3:26சுமார் கி.பி. 26

    நங்காய் மாகாத்தின் மகன், மாகாத் மத்தத்தியாவின் மகன், மத்தத்தியா சேமேயின் மகன், சேமேய் யோசேக்கின் மகன், யோசேக்கு யோதாவின் மகன்,

  8. லூக்கா 3:27சுமார் கி.பி. 26

    யோதா யோவன்னானின் மகன், யோவன்னான் ரேசாவின் மகன், ரேசா செருபாபேலின் மகன், செருபாபேல் சலாத்தியேலின் மகன், சலாத்தியேல் நேரியின் மகன்,

  9. லூக்கா 3:28சுமார் கி.பி. 26

    நேரி மெல்கியின் மகன், மெல்கி அத்தியின் மகன், அத்தி கோசாமின் மகன், கோசாம் எல்மோதாமின் மகன், எல்மோதாம் ஏரின் மகன்,

  10. லூக்கா 3:29சுமார் கி.பி. 26

    ஏர் யோசேயின் மகன், யோசே எலியேசரின் மகன், எலியேசர் யோரீமின் மகன், யோரீம் மாத்தாத்தின் மகன், மாத்தாத் லேவியின் மகன்,

  11. லூக்கா 3:30சுமார் கி.பி. 26

    லேவி சிமியோனின் மகன், சிமியோன் யூதாவின் மகன், யூதா யோசேப்பின் மகன், யோசேப்பு யோனாமின் மகன், யோனாம் எலியாக்கீமின் மகன்,

  12. லூக்கா 3:31சுமார் கி.பி. 26

    எலியாக்கீம் மெலெயாவின் மகன், மெலெயா மென்னாவின் மகன், மென்னா மாத்தாத்தாவின் மகன், மாத்தாத்தா நாத்தானின் மகன், நாத்தான் தாவீதின் மகன்,

  13. லூக்கா 3:32சுமார் கி.பி. 26

    தாவீது ஈசாயின் மகன், ஈசாய் ஓபேத்தின் மகன், ஓபேத் போவாஸின் மகன், போவாஸ் சல்மோனின் மகன், சல்மோன் நகசோனின் மகன்,

  14. லூக்கா 3:33சுமார் கி.பி. 26

    நகசோன் அம்மினதாபின் மகன், அம்மினதாப் ஆராமின் மகன், ஆராம் எஸ்ரோமின் மகன், எஸ்ரோம் பாரேஸின் மகன், பாரேஸ் யூதாவின் மகன்,

  15. லூக்கா 3:34சுமார் கி.பி. 26

    யூதா யாக்கோபின் மகன், யாக்கோபு ஈசாக்கின் மகன், ஈசாக்கு ஆபிரகாமின் மகன், ஆபிரகாம் தேராவின் மகன், தேரா நாகோரின் மகன்,

  16. லூக்கா 3:35சுமார் கி.பி. 26

    நாகோர் சேரூக்கின் மகன், சேரூக் ரெகூவின் மகன், ரெகூ பேலேக்கின் மகன், பேலேக் ஏபேரின் மகன், ஏபேர் சாலாவின் மகன்,

  17. லூக்கா 3:36சுமார் கி.பி. 26

    சாலா காயினானின் மகன், காயினான் அர்ப்பகசாத்தின் மகன், அர்ப்பகசாத் சேமின் மகன், சேம் நோவாவின் மகன், நோவா லாமேக்கின் மகன்,

  18. லூக்கா 3:37சுமார் கி.பி. 26

    லாமேக்கு மெத்தூசலாவின் மகன், மெத்தூசலா ஏனோக்கின் மகன், ஏனோக்கு யாரேத்தின் மகன், யாரேத் மகலாலெயேலின் மகன், மகலாலெயேல் கேனானின் மகன்,

  19. லூக்கா 3:38சுமார் கி.பி. 26

    கேனான் ஏனோஸின் மகன், ஏனோஸ் சேத்தின் மகன், சேத் ஆதாமின் மகன், ஆதாம் இறைவனின் மகன்.

  20. லூக்கா 4:1சுமார் கி.பி. 27

    இயேசு பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவராக, யோர்தான் நதியிலிருந்து திரும்பிவந்து ஆவியானவரால் பாலைவனத்திற்கு வழிநடத்தப்பட்டார்.

  21. லூக்கா 4:2சுமார் கி.பி. 27

    அங்கே அவர் பிசாசினால் நாற்பது நாட்களாக சோதிக்கப்பட்டார். அந்நாட்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை; அந்த நாட்கள் முடிந்தவுடன் அவர் பசியாயிருந்தார்.

  22. லூக்கா 4:3சுமார் கி.பி. 27

    சாத்தான் அவரிடம், “நீர் இறைவனின் மகனானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும்” என்றான்.

  23. லூக்கா 4:4சுமார் கி.பி. 27

    அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டும் உயிர் பிழைப்பதில்லை’ என்று எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார்.

  24. லூக்கா 4:5சுமார் கி.பி. 27

    சாத்தான் இயேசுவை உயரமான ஒரு இடத்திற்குக் கூட்டிச்சென்று, ஒரு வினாடியில் உலகத்தின் எல்லா அரசுகளையும் அவருக்குக் காண்பித்தான்.

  25. லூக்கா 4:6சுமார் கி.பி. 27

    பிறகு சாத்தான் அவரிடம், “இந்த அரசுகள் எல்லாவற்றின் அதிகாரத்தையும் மாட்சிமையையும் நான் உமக்குத் தருவேன்; ஏனெனில் அது எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது, நான் விரும்பினால் அதை எவருக்கும் கொடுக்க என்னால் முடியும்.