circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
- லூக்கா 15:32சுமார் கி.பி. 33
ஆனால் உம் சகோதரனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுது மீண்டும் உயிர்பெற்றிருக்கிறான். காணாமல் போயிருந்தான்; மீண்டும் நமக்குக் கிடைத்திருக்கிறான். அதனால், நாம் சந்தோஷத்தோடே கொண்டாடுவது முறையானதே’ என்றான்.”
- லூக்கா 16:1சுமார் கி.பி. 33
இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஒரு செல்வந்தன் இருந்தான். அவனது உடைமைகளையெல்லாம், அவனது நிர்வாகி வீண்செலவு செய்வதாக, அவன்மேல் குற்றம் சுமத்தப்பட்டது.
- லூக்கா 16:2சுமார் கி.பி. 33
எனவே அந்த செல்வந்தன் அவனைக் கூப்பிட்டு அவனிடம், ‘உன்னைப்பற்றி நான் கேள்விப்படுகிறது என்ன? நீ வந்து, உனது நிர்வாகத்தைக் குறித்த கணக்கை என்னிடம் ஒப்படைத்துவிடு. இனிமேலும் நீ எனது நிர்வாகியாக இருக்கமுடியாது’ என்றான்.
- லூக்கா 16:3சுமார் கி.பி. 33
“அதைக்கேட்ட அந்த நிர்வாகி, ‘இப்போது நான் என்ன செய்வேன்? எனது எஜமான் என்னை வேலையில் இருந்து நீக்கி விடப்போகிறாரே. நிலத்தைக் கொத்தவோ எனக்குப் பெலன் இல்லை. பிச்சை எடுக்கவும் எனக்கு வெட்கமாய் இருக்கிறது.
- லூக்கா 16:4சுமார் கி.பி. 33
இங்கு நான் எனது வேலையை இழந்து விடும்போது, மக்கள் தங்களுடைய வீடுகளிலே என்னை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும்,’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
- லூக்கா 16:5சுமார் கி.பி. 33
“தன்னுடைய எஜமானிடம் கடன்பட்டிருந்த எல்லோரையும் கூப்பிட்டான். வந்தவர்களில், முதலாவது ஆளிடம், ‘எனது எஜமானுக்கு நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்றான்.
- லூக்கா 16:6சுமார் கி.பி. 33
“அதற்கு அவன், ‘மூன்று ஆயிரம் லிட்டர் எண்ணெய் கொடுக்க வேண்டியுள்ளது’ என்றான். “அந்த நிர்வாகி அவனிடம், ‘சீக்கிரமாய் உட்கார்ந்து, உனது கணக்கு சீட்டை எடுத்து, அதில் ஆயிரத்து ஐந்நூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
- லூக்கா 16:7சுமார் கி.பி. 33
“பின்பு அவன் இரண்டாவது ஆளிடம், ‘நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்று கேட்டான். “ ‘ஆயிரம் மூட்டை கோதுமை’ என்று அவன் பதிலளித்தான். “அப்பொழுது அவன் அவனிடம், ‘உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதை எண்ணூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
- லூக்கா 16:8சுமார் கி.பி. 33
“அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
- லூக்கா 16:9சுமார் கி.பி. 33
உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
- லூக்கா 16:10சுமார் கி.பி. 33
“மிகச் சிறியவற்றில் உண்மையுள்ளவன், பெரியவற்றிலும் உண்மையுள்ளவனாய் இருப்பான். சிறியவற்றில் அநீதியுள்ளவனாய் இருக்கிறவன், பெரியவற்றிலும் அநீதியுள்ளவனாய் இருப்பான்.
- லூக்கா 16:11சுமார் கி.பி. 33
எனவே, இந்த உலகத்தின் செல்வத்தைப் பயன்படுத்துவதில், நீங்கள் உண்மையற்றவர்களாய் இருந்தால், உண்மையான செல்வத்தை, யார் உங்களை நம்பி, உங்கள் கையில் கொடுப்பான்?
- லூக்கா 16:12சுமார் கி.பி. 33
இன்னொருவனுடைய சொத்தைக் கையாள்வதில் நீங்கள் நம்பகமாக நடக்கவில்லையென்றால், யார் தன் சொத்தை உங்களுக்கு சொந்தமாய் இருக்கும்படி கொடுப்பான்?
- லூக்கா 16:13சுமார் கி.பி. 33
“எந்த வேலைக்காரனும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும், பணத்துக்கும் பணிசெய்ய முடியாது” என்றார்.
- லூக்கா 16:14சுமார் கி.பி. 33
பண ஆசை பிடித்தவர்களான பரிசேயர் இதைக் கேட்டபோது, இயேசுவை ஏளனம் செய்தார்கள்.
- லூக்கா 16:15சுமார் கி.பி. 33
இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் மனிதருடைய பார்வையில், உங்களை நீதிமான்கள் எனக் காண்பிக்கிறீர்கள். ஆனால் இறைவனோ, உங்கள் இருதயங்களை அறிவார். மனிதரிடையே உயர்வாய் மதிக்கப்படும் காரியங்கள், இறைவனுடைய பார்வையில் அருவருப்பாய் இருக்கிறது.
- லூக்கா 16:16சுமார் கி.பி. 33
“மோசேயின் சட்டமும், இறைவாக்கினரின் வார்த்தைகளும், யோவான் ஸ்நானகனுடைய காலம்வரைக்கும் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்தக் காலத்திலிருந்தே, இறைவனுடைய அரசைப்பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. எல்லோரும் பலவந்தமாய் அதற்குள் செல்வதற்கு முயற்சிக்கிறார்கள்.
- லூக்கா 16:17சுமார் கி.பி. 33
வானமும், பூமியும் மறைந்து போகலாம், மோசேயின் சட்டத்தில் இருக்கிற எழுத்தின் சிறிய புள்ளிகூட மறைந்துபோகாது.
- லூக்கா 16:18சுமார் கி.பி. 33
“தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்பவன், விபசாரம் செய்கிறான். விவாகரத்து செய்யப்பட்ட ஒரு பெண்ணை யாராவது திருமணம் செய்தால், அவனும் விபசாரம் செய்கிறான்.
- லூக்கா 16:19சுமார் கி.பி. 33
“ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கருஞ்சிவப்பும் மென்பட்டுமான உடை உடுத்தி, ஒவ்வொரு நாளும் சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருந்தான்.
- லூக்கா 16:20சுமார் கி.பி. 33
அவனுடைய வாசலருகே, லாசரு என்னும் ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய்,
- லூக்கா 16:21சுமார் கி.பி. 33
பணக்காரனின் மேஜையில் இருந்து விழுவதைச் சாப்பிடுவதற்கு ஆசையாயிருந்தான். நாய்களுங்கூட வந்து, அவன் புண்களை நக்கின.
- லூக்கா 16:22சுமார் கி.பி. 33
“காலப்போக்கில் அந்தப் பிச்சைக்காரன் இறந்தான். தேவதூதர்கள் அவனைத் தூக்கிக்கொண்டுபோய், ஆபிரகாமின் மடியிலே அமர்த்தினார்கள். அந்தப் பணக்காரனும் இறந்து அடக்கம்பண்ணப்பட்டான்.
- லூக்கா 16:23சுமார் கி.பி. 33
அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான்.
- லூக்கா 16:24சுமார் கி.பி. 33
எனவே அவன், ‘தந்தை ஆபிரகாமே’ என்று அவனைக் கூப்பிட்டு, ‘என்னில் இரக்கம் கொண்டு, லாசரு தனது விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி, அவனை அனுப்பும். நான் இந்த நெருப்பில் கிடந்து வேதனைப்படுகிறேனே’ என்றான்.