உள்ளடக்கத்திற்குச் செல்க

Gezer

14 verses · 2 known names

இவ்வாறும் அறியப்படுகிறார்: Gazer

31.8700, 34.9200 கூகுள் வரைபடத்தில் காண்க

Gezer பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அதேவேளையில் கேசேர் நகரின் அரசனாகிய ஒராம், லாகீசு நகரத்தாருக்கு உதவிசெய்ய படையோடு வந்திருந்தான். ஆனாலும் யோசுவா அவனையும் அவனுடைய படையையும் ஒருவரும் தப்பிப் போகாதிருக்கும் வரைக்கும் தோற்கடித்தான்.

  2. எக்லோனின் அரசன் ஒருவன், கேசேரின் அரசன் ஒருவன்,

  3. பின் மேற்குத் திசையில் யப்லெத்திரின் பிரதேசத்தை நோக்கிக் கீழ் இறங்கி, அப்பிரதேசத்திலுள்ள கீழ் பெத் ஓரோன், கேசேர்வரை சென்று அங்கிருந்து கடலில் முடிவடைந்தது.

  4. ஆனால் எப்பிராயீமியர் கேசேர் பகுதியில் வாழ்ந்த கானானியரை அங்கிருந்து வெளியேற்றவில்லை. கானானியரும் எப்பிராயீம் மக்கள் மத்தியில் இன்றுவரை வாழ்கின்றார்கள். அவர்கள் கட்டாய வேலைசெய்ய வேண்டியிருந்தது.

  5. எப்பிராயீம் மலைநாட்டில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமாயிருந்த சீகேம், கேசேர்,

  6. எப்பிராயீம் கோத்திரத்தாரும் கேசேரில் குடியிருந்த கானானியரை வெளியே துரத்திவிடவில்லை. எனவே கானானியரோ தொடர்ந்து அவர்களுடனே வாழ்ந்துவந்தார்கள்.

  7. எனவே யெகோவா கட்டளையிட்டபடியே தாவீது செய்தான், பெலிஸ்தியரை கிபியோன் தொடங்கி கேசேர் எல்லைவரை துரத்தி முறியடித்தான்.

  8. அரசன் சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், தன் சொந்த அரண்மனையையும், அதைத் தாங்கும் அடுக்குத் தளங்களையும், எருசலேம் மதிலையும், ஆத்சோர், மெகிதோ, கேசேர் ஆகிய பட்டணங்களையும் கட்டுவதற்கு நியமித்த கட்டாய வேலையின் விபரம் இதுவே:

  9. எகிப்திய அரசனான பார்வோன் படையெடுத்துப்போய் கேசேரைக் கைப்பற்றியிருந்தான். அதை எரித்து, அங்கிருந்த கானானிய குடிமக்களையும் கொலைசெய்தான். பின்பு சாலொமோனின் மனைவியான தன் மகளுக்குத் திருமணப் பரிசாக இதைக் கொடுத்தான்.

  10. சாலொமோன் கேசேரைத் திருப்பிக் கட்டியதோடு, கீழ் பெத் ஓரோனையும்,

  11. எப்பிராயீமின் மலைநாட்டில் அடைக்கலப் பட்டணமான சீகேமும், அத்துடன் கேசேர்,

  12. பெத்தேலையும் அதைச் சுற்றியிருந்த கிராமங்களும் அவர்களுடைய நிலங்களும், குடியிருப்புகளும் உள்ளடக்கியிருந்தன. கிழக்கே நாரானும், மேற்கே கேசேரும் அதன் கிராமங்களும், ஆயாவும் அதன் கிராமங்களும் வழிநெடுகிலுமுள்ள சீகேமும் அதன் கிராமங்களுமாக இருந்தன. அவை அவர்களுடைய நிலமும் குடியிருப்புமாயிருந்தன.

  13. இறைவன் கட்டளையிட்டபடியே தாவீது செய்தான். அவர்கள் பெலிஸ்திய இராணுவத்தை கிபியோன் தொடங்கி கேசேர்வரை வெட்டி வீழ்த்தினார்கள்.

  14. சில காலத்திற்குபின் கேசேரில் பெலிஸ்தியருடன் யுத்தம் தொடங்கியது; அந்நேரத்தில் ஊஷாத்தியனான சிபெக்காய், அரக்கனான ரெப்பாயீமின் வழித்தோன்றலில் வந்த சிப்பாயி என்பவனைக் கொன்றான். பெலிஸ்தியர்கள் கீழ்படுத்தப்பட்டார்கள்.