Skip to content

Tamar

7 வசனங்கள் · 3 குடும்ப உறுப்பினர்கள்

இவ்வாறும் அறியப்படுகிறார்: Thamar

Tamar பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. யூதா, தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்குத் தாமார் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தான்.

  2. அப்பொழுது யூதா, தன் மருமகள் தாமாரிடம், “என் மகன் சேலா பெரியவனாகுமட்டும், நீ ஒரு விதவையாக உன் தகப்பன் வீட்டிற்குப்போய்க் குடியிரு” என்றான். “தன் மகன் சேலாவும் அவனுடைய சகோதரர்போல் இறந்துபோவான்” என்று எண்ணியே அப்படிச் சொன்னான். எனவே தாமார் தன் தகப்பன் வீட்டில் குடியிருக்கும்படி போனாள்.

  3. “தன் செம்மறியாடுகளுக்கு மயிர் கத்தரிப்பதற்காக உன் மாமனார் திம்னாவுக்குப் போகிறார்” என தாமாருக்கு அறிவிக்கப்பட்டது.

  4. ஏறக்குறைய மூன்று மாதம் சென்றபின், “உமது மருமகள் தாமார், வேசித்தனம் செய்து, அதன் பலனாகக் கருவுற்றிருக்கிறாள்” என யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு யூதா, “அவளை வெளியே கொண்டுவந்து எரித்துக் கொல்லுங்கள்!” என்றான்.

  5. இந்த இளம்பெண் வழியாக யெகோவா உனக்குக் கொடுக்கவிருக்கும் சந்ததியினரால் உன் குடும்பம் தாமார் யூதாவுக்குப் பெற்றெடுத்த பேரேஸின் குடும்பத்தைப்போல் இருப்பதாக!” என வாழ்த்தினார்கள்.

  6. யூதாவின் மருமகள் தாமார் என்பவள் யூதாவுக்கு பேரேஸ், சேரா என்பவர்களைப் பெற்றாள். யூதாவிற்கு மொத்தம் ஐந்து மகன்கள் இருந்தார்கள்.

  7. யூதா பாரேஸுக்கும் சாராவுக்கும் தகப்பன், அவர்களின் தாய் தாமார், பாரேஸ் எஸ்ரோமுக்குத் தகப்பன், எஸ்ரோம் ஆராமுக்குத் தகப்பன்,