Skip to content

Er

6 வசனங்கள் · 7 குடும்ப உறுப்பினர்கள்

Er பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. அவள் கர்ப்பந்தரித்து, ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு ஏர் என்று பெயரிடப்பட்டது.

  2. யூதா, தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்குத் தாமார் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தான்.

  3. ஆனால் யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவின் பார்வையில் கொடியவனாய் இருந்தபடியால், யெகோவா அவனை அழித்தார்.

  4. யூதாவின் மகன்கள்: ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள். கானான் நாட்டில் ஏர், ஓனான் என்பவர்கள் இறந்துபோனார்கள். பேரேஸின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

  5. ஏர், ஓனான் ஆகியோர் யூதாவின் மகன்கள். ஆனால் அவர்கள் கானான் நாட்டில் இறந்துபோனார்கள்.

  6. யூதாவின் மகன்கள்: ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூவரும் சூவாவின் மகளான கானானிய பெண்ணின் மகன்கள். யூதாவின் மூத்த மகன் ஏர் என்பவன் யெகோவாவின் பார்வையில் கொடுமையானவனாய் இருந்தான். அதனால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார்.