உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவை தங்கள் உயிர்களையே இழக்கும்படி பாவம் செய்த அந்த மனிதர்களின் தூபகிண்ணங்களாயிருந்தும் அவை பரிசுத்தமானவை. அவை யெகோவா முன்பாக வைக்கப்பட்டதனால் பரிசுத்தமாயிருக்கின்றன. எனவே அவற்றைத் தகடுகளாக அடித்துப் பலிபீடத்தை மூடவேண்டும். அவை இஸ்ரயேலருக்கு ஒரு அடையாளமாக இருக்கட்டும்” என்றார்.

  2. மோசேயின் மூலம் யெகோவா கட்டளையிட்டபடியே அவற்றைச் செய்தான். “ஆரோனின் சந்ததியில் வந்தவனைத்தவிர, வேறு எவனும் யெகோவாவுக்கு முன்பாகத் தூபங்காட்ட வரக்கூடாது. இதை மீறினால், அவன் கோராகையும், அவனைப் பின்பற்றியவர்களையும் போலாவான்” என்பதை இஸ்ரயேலருக்கு நினைவுபடுத்தவே இது செய்யப்பட்டது.

  3. மறுநாள் இஸ்ரயேலரின் முழுசமூகமும் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகக் கூடியது. “யெகோவாவின் மக்களை நீங்கள் கொன்று விட்டீர்கள்” என்று அவர்கள் முறுமுறுத்தார்கள்.

  4. மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாகக் கூடிவந்த அந்த மக்கள்சபை, சபைக் கூடாரத்தை நோக்கித் திரும்பியபோது, திடீரென மேகம் சபைக் கூடாரத்தை மூடியது. யெகோவாவின் மகிமையும் அவர்களுக்குக் காணப்பட்டது.

  5. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:

  6. “நான் உடனே இவர்களை அழிக்கும்படி நீங்கள் இவர்களைவிட்டு விலகி அப்பால் போங்கள்” என்றார். ஆனால் அவர்களோ முகங்குப்புற விழுந்தார்கள்.

  7. அப்பொழுது மோசே ஆரோனிடம், “நீ உன் தூபகிண்ணத்தை எடுத்து, பலிபீடத்தின் நெருப்பையும், நறுமணத்தூளையும் அதில் போட்டு, சபையாருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி அவர்களிடம் விரைந்து போ. யெகோவாவின் கோபம் வந்திருக்கிறது; கொள்ளைநோயும் தொடங்கிவிட்டது” என்றான்.

  8. யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,

  9. அவற்றை நான் உன்னைச் சந்திக்கும் இடமான சாட்சிப்பெட்டியின் முன்னால் சபைக் கூடாரத்தில் வை.

  10. அப்பொழுது நான் தெரிந்தெடுக்கும் மனிதனின் கோல் துளிர்க்கும். இவ்விதம் உனக்கெதிரான இஸ்ரயேலரின் தொடர்ச்சியான இந்த முறுமுறுப்பை நான் என்னை விட்டகற்றுவேன்” என்றார்.

  11. மோசே அந்தக் கோல்களை சாட்சிபகரும் கூடாரத்தில் யெகோவா முன்னிலையில் வைத்தான்.

  12. பின்பு மோசே யெகோவா முன்னிருந்த கோல்களையெல்லாம் எடுத்து வெளியில் இருந்த இஸ்ரயேலர் அனைவரிடமும் கொண்டுவந்தான். அவர்கள் அவற்றைப் பார்த்து, ஒவ்வொருவரும் தன்தன் கோல்களை எடுத்துக்கொண்டார்கள்.

  13. ஆனால் யெகோவா மோசேயிடம், “இக்கலகக்காரருக்கு ஒரு அடையாளமாக வைக்கப்படும்படி ஆரோனின் கோலைத் திரும்பவும் சாட்சிப்பெட்டியின் முன்னேவை. அது எனக்கு விரோதமான அவர்களின் முறுமுறுப்புக்கு ஒரு முடிவை உண்டாக்கும். அதனால் அவர்களும் சாகாதிருப்பார்கள்” என்றார்.

  14. யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.

  15. யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்திற்கு அருகே வருபவன் எவனும் சாவான். நாங்கள் எல்லோரும் சாகப்போகிறோம்” என்றார்கள்.

  16. யெகோவா ஆரோனிடம் சொன்னதாவது, “நீயும், உன் மகன்களும் உன் தகப்பனின் குடும்பமும் பரிசுத்த இடத்திற்கு விரோதமாகச் செய்யப்படும் குற்றங்களுக்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆசாரியத்துவப்பணியின் குற்றங்களுக்கான பொறுப்பை நீயும், உன் மகன்களும் மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

  17. நான் நானே உன் உடன் ஒத்த லேவியரை இஸ்ரயேலருள் இருந்து தெரிந்தெடுத்து, உனக்குக் கொடையாகக் கொடுத்தேன். சபைக் கூடாரத்தின் வேலைகளைச் செய்வதற்காக அவர்கள் யெகோவாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

  18. பலிபீடத்திலும், திரைக்குள்ளும் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளிலும், நீயும் உன் மகன்களும் மட்டுமே ஆசாரியர்களாகப் பணிசெய்யலாம். நான் ஆசாரியப்பணியை உனக்கு ஒரு கொடையாகக் கொடுக்கிறேன். பரிசுத்த இடத்திற்குக் கிட்டவரும் வேறு எவனும் கொல்லப்படவேண்டும்” என்றார்.

  19. பின்னும் யெகோவா ஆரோனிடம் சொன்னதாவது, “எனக்குக் கொடுக்கப்படும் காணிக்கைகளுக்குப் பொறுப்பாக நானே உன்னை வைத்திருக்கிறேன். இஸ்ரயேலர் எனக்காகக் கொடுக்கும் பரிசுத்த காணிக்கைகள் எல்லாவற்றையும் உனக்கும், உன் மகன்களுக்கும், உங்கள் பங்காகவும், நிரந்தர பாகமாகவும் கொடுக்கிறேன்.

  20. மகா பரிசுத்த காணிக்கைகளில் நெருப்பில் எரிக்கப்படாத அந்தப் பங்கு உனக்குச் சேரவேண்டும். தானிய காணிக்கை, பாவநிவாரண காணிக்கை, குற்றநிவாரண காணிக்கை எதுவானாலும் சரி, அவர்கள் மகா பரிசுத்தமான காணிக்கையாகக் கொண்டுவரும் எல்லா கொடைகளிலுமிருந்து எரிக்கப்படாத அப்பங்கு உனக்கும், உன் மகன்களுக்கும் சொந்தமாகும்.

  21. “இஸ்ரயேலருடைய காணிக்கைகளின் கொடைகள் எல்லாவற்றிலுமிருந்து பிரித்து வைக்கப்படும் எதுவும் உங்களுக்கே உரியது. நான் இதை உனக்கும், உன் மகன்களுக்கும், உன் மகள்களுக்கும், உன் வழக்கமான பங்காகக் கொடுக்கிறேன். உன் வீட்டில் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருக்கிற எவனும் அதைச் சாப்பிடலாம்.

  22. “இஸ்ரயேலர் தங்கள் அறுவடையின் முதற்பலனாக யெகோவாவுக்குக் கொடுக்கும் சிறந்த ஒலிவ எண்ணெயையும், சிறந்த திராட்சைரசத்தையும், தானியத்தையும் நான் உனக்குக் கொடுத்தேன்.

  23. அவர்கள் யெகோவாவுக்குக் கொண்டுவரும் நாட்டின் முதற்பலன் முழுவதும் உனக்குரியவை. உங்கள் குடும்பத்தில் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருக்கிற எவனும் அதைச் சாப்பிடலாம்.

  24. யெகோவாவுக்காக கொண்டுவரப்படும் கர்ப்பத்தின் முதற்பேறான பிள்ளையும், மிருகமும் உன்னுடையவைகளே. ஆனால் ஒவ்வொரு முதற்பேறான மகனையும், அசுத்தமான மிருகங்களின் ஆண் தலையீற்றையும் நீ மீட்கவேண்டும்.

  25. “ஆனாலும், தலையீற்றான மாடுகள், செம்மறியாடு, வெள்ளாடு ஆகியவற்றை நீ மீட்கக்கூடாது. அவை பரிசுத்தமானவை. அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தில் தெளித்து அவற்றின் கொழுப்பை யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாய், நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக எரித்துவிடு.