உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. என் நெருங்கிய நண்பர்களை நீர் என்னைவிட்டு விலக்கி, என்னை அவர்களின் வெறுப்புக்கு உள்ளாக்கினீர்; நான் அடைபட்டு தப்பமுடியாமல் இருக்கிறேன்.

  2. என் கண்கள் துக்கத்தினால் மயங்கி இருக்கின்றன. யெகோவாவே, நான் ஒவ்வொரு நாளும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். உம்மை நோக்கியே என் கைகளை நீட்டுகிறேன்.

  3. இறந்தவர்களுக்கு நீர் உமது அதிசயங்களைக் காட்டுவீரோ? இறந்தவர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ?

  4. பிரேதக்குழியில் உமது அன்பும், அழிவில் உமது சத்தியமும் அறிவிக்கப்படுகிறதோ?

  5. உமது அதிசயங்கள் இருள் நிறைந்த இடத்திலும், மறதியின் நாட்டில் உமது நீதியான செயல்களும் அறியப்படுமோ?

  6. ஆனாலும் யெகோவாவே, நான் உதவிகேட்டு உம்மை நோக்கிக் கதறுகிறேன்; காலையிலே எனது மன்றாட்டு உமக்கு முன்பாக வருகிறது.

  7. யெகோவாவே, நீர் ஏன் என்னைப் புறக்கணிக்கிறீர்? உமது முகத்தை ஏன் எனக்கு மறைக்கிறீர்?

  8. என் இளமையிலிருந்தே நான் துன்புறுத்தப்பட்டு மரணத்திற்குச் சமீபமானேன்; நான் உம்மால் வரும் திகிலை அனுபவித்து மனமுடைந்து போயிருக்கிறேன்.

  9. உமது கோபம் என்மேல் வந்து என்னை மூடியது; உமது திகில் என்னைத் தாக்குகிறது.

  10. நீர் என் கூட்டாளிகளையும் என் அன்புக்குரியவர்களையும் என்னைவிட்டு அகற்றினீர்; இருளே என் நெருங்கிய நண்பனாய் இருக்கிறது.

  11. எஸ்ராகியனாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் சங்கீதம். யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பை நான் என்றென்றும் பாடுவேன்; எல்லாத் தலைமுறைகளுக்கும் உமது சத்தியத்தை என் வாயினால் தெரியப்படுத்துவேன்.

  12. உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றைக்கும் உறுதியாய் நிலைக்கிறது என்று அறிவிப்பேன்; நீர் உமது சத்தியத்தை வானத்தில் நிறுவினீர் என்பதையும் நான் அறிவிப்பேன்.

  13. “நான் தெரிந்துகொண்டவனோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறேன்; என் அடியவனாகிய தாவீதுக்கு ஆணையிட்டிருக்கிறேன்.

  14. ‘உன் வம்சத்தை என்றென்றும் நிலைநிறுத்தி, எல்லாத் தலைமுறைகளிலும் உன் சிங்காசனத்தை உறுதிப்படுத்துவேன்’ ” என்று நீர் சொன்னீர்.

  15. யெகோவாவே, வானங்கள் உமது அதிசயங்களைப் புகழ்கின்றன; அவை பரிசுத்தவான்களின் சபையிலே உமது சத்தியத்தைப் புகழ்கின்றன.

  16. மேலே ஆகாயத்தில் உள்ளவர்களில் யெகோவாவுடன் ஒப்பிடத்தக்கவர் யார்? பரலோக தூதர்களின் மத்தியில் யெகோவாவைப் போன்றவர் யார்?

  17. பரிசுத்தவான்களின் சபையில் இறைவனே மிகவும் பயத்திற்கு உரியவராயிருக்கிறார்; தம்மைச் சுற்றியுள்ள எல்லாரைப்பார்க்கிலும் அவரே பிரமிக்கத்தக்கவர்.

  18. சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? யெகோவாவே, நீர் வல்லவர்; உமது சத்தியம் உம்மைச் சூழ்ந்திருக்கிறது.

  19. பொங்கியெழும் கடலின்மேல் நீர் ஆளுகை செய்கிறீர்; அதின் அலைகள் பயங்கரமாக எழும்பும்போது நீர் அவற்றை அமைதியாக்குகிறீர்.

  20. நீர் ராகாபை அழிந்தவர்களில் ஒருவரைப்போல் நொறுக்கினீர்; உமது பலமுள்ள புயத்தினால் உமது பகைவரைச் சிதறடித்தீர்.

  21. வானங்கள் உம்முடையவை, பூமியும் உம்முடையதே; உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே நிலைநிறுத்தினீர்.

  22. வடக்கையும் தெற்கையும் நீர் ஏற்படுத்தினீர்; தாபோரும் எர்மோனும் உமது பெயரில் மகிழ்ந்து பாடுகின்றன.

  23. உமது புயம் வலிமைமிக்கது; உமது கரம் பலமுள்ளது, உமது வலதுகரம் உயர்த்தப்பட்டுள்ளது.

  24. நீதியும் நியாயமும் உமது சிங்காசனத்தின் அடித்தளம்; அன்பும் சத்தியமும் உமக்குமுன் செல்கின்றன.

  25. யெகோவாவே உம்மை ஆர்ப்பரித்துத் துதிக்க அறிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் உமது பிரசன்னத்தின் வெளிச்சத்திலே நடப்பார்கள்.