உள்ளடக்கத்திற்குச் செல்க

God

11,427 வசனங்கள் · 2 குடும்ப உறுப்பினர்கள்

God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவர்கள் நாள்தோறும் உமது பெயரில் களிகூருகிறார்கள்; அவர்கள் உமது நீதியில் மேன்மை அடைவார்கள்.

  2. நீரே அவர்களின் மகிமையும் பெலனுமாய் இருக்கிறீர்; நீர் உமது தயவினால் எங்கள் பலத்தை உயரப்பண்ணினீர்.

  3. உண்மையாகவே எங்கள் கேடயம் யெகோவாவுக்குரியது; எங்கள் அரசர் இஸ்ரயேலின் பரிசுத்தருக்குரியவர்.

  4. நீர் ஒருமுறை தரிசனத்தில், உமக்கு உண்மையான மக்களுடன் பேசிச் சொன்னதாவது: “நான் ஒரு வீரனைப் பலத்தால் நிறைத்தேன்; மக்கள் மத்தியிலிருந்து நான் ஓர் இளைஞனை உயர்த்தியிருக்கிறேன்.

  5. நான் என் பணியாளனான தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.

  6. என் கரம் அவனைத் தாங்கும்; நிச்சயமாகவே என் புயம் அவனைப் பலப்படுத்தும்.

  7. நான் அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்குவேன், அவனுடைய விரோதிகளை அடித்து வீழ்த்துவேன்.

  8. என் உடன்படிக்கையின் அன்பும் சத்தியமும் அவனோடிருக்கும்; என் பெயரால் அவன் பலம் உயரும்.

  9. நான் அவனுடைய ஆளுகையை கடலுக்கு மேலாகவும், அவனுடைய ஆட்சியை ஆறுகளுக்கு மேலாகவும் பரப்புவேன்.

  10. அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தகப்பன், என் இறைவன், என் இரட்சகராகிய கன்மலை’ என்று கூப்பிடுவான்.

  11. நான் அவனை எனது முதற்பேறான மகனாகவும், பூமியின் அரசர்களிலெல்லாம் மிக உயர்ந்தவனாகவும் நியமிப்பேன்.

  12. நான் எப்பொழுதும் அவனுக்கு என் உடன்படிக்கையின் அன்பை வழங்குவேன்; நான் அவனோடு செய்யும் உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.

  13. நான் அவனுடைய வம்சத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன்; அவனுடைய சிங்காசனத்தை வானங்கள் உள்ளமட்டும் நிலைப்படுத்துவேன்.

  14. “அவனுடைய மகன்கள் என் சட்டத்தைக் கைவிட்டு, என் நியமங்களைப் பின்பற்றாது போனால்,

  15. என் விதிமுறைகளை மீறி, எனது கட்டளைகளைக் கைக்கொள்ளத் தவறினால்,

  16. நான் அவர்களுடைய பாவத்தைத் தடியினாலும், அவர்களுடைய அநியாயத்தை சவுக்கடியினாலும் தண்டிப்பேன்;

  17. ஆனாலும் நான் என் உடன்படிக்கையின் அன்பை அவனைவிட்டு அகற்றமாட்டேன்; என் வாக்குறுதியை ஒருபோதும் மாற்றவுமாட்டேன்.

  18. நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன்; என் உதடுகள் சொன்னதை மாற்றவுமாட்டேன்.

  19. ஒரேதரமாக நான் என் பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டிருக்கிறேன்; தாவீதுக்கு நான் பொய்சொல்லமாட்டேன்:

  20. அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைக்கும், அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்;

  21. ஆனாலும், இப்பொழுது நீர் அவனைத் தள்ளி, அவனைப் புறக்கணித்து விட்டிருக்கிறீர்; நீர் அபிஷேகம் பண்ணியவன்மேல் கோபமாயிருக்கிறீர்.

  22. உமது பணியாளனுடன் செய்த உடன்படிக்கையை கைவிட்டு, அவனுடைய கிரீடத்தைத் தூசியில் தள்ளி அவமானப்படுத்தினீர்.

  23. நீர் அவனுடைய மதில்களைத் தகர்த்து, அவனுடைய அரண்களையெல்லாம் இடித்துத் தூளாக்கினீர்.

  24. நீர் அவனுடைய எதிரிகளின் வலதுகையை உயர்த்தினீர்; அவனுடைய பகைவர் அனைவரும் மகிழும்படி செய்தீர்.

  25. நீர் அவனுடைய வாலிப நாட்களை குறுகப்பண்ணி, அவனை வெட்கத்தின் உடையால் மூடினீர்.