God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து, என் மன்றாட்டின் குரலைக் கேட்டார்.
என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த இறைவனுக்குத் துதி உண்டாகட்டும்.
கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். இறைவன் நம்மேல் கிருபையாயிருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக; அவர் தமது முகத்தை நம்மீது பிரகாசிக்கச் செய்வாராக.
இறைவனே, உமது வழிகள் பூமியிலும், உமது இரட்சிப்பு எல்லா நாடுகளுக்கு மத்தியிலும் அறியப்படும்.
இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
நீர் மக்கள் கூட்டத்தை நீதியாய் ஆட்சிசெய்து, பூமியின் நாடுகளுக்கு வழிகாட்டுவதால், மக்கள் மகிழ்ந்து களிப்புடன் பாடுவார்களாக.
இறைவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
அப்பொழுது நிலம் விளைச்சலைக் கொடுக்கும்; இறைவனாகிய எங்கள் இறைவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
இறைவன் எங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்; ஆகையால் பூமியின் எல்லைகளில் உள்ளவர்கள் எல்லோரும் அவருக்குப் பயப்படுவார்கள்.
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதமாகிய பாட்டு. இறைவன் எழுந்திருப்பாராக, அவருடைய பகைவர் சிதறடிக்கப்படுவார்களாக; அவருடைய எதிரிகள் அவருக்கு முன்பாகப் பயந்து ஓடுவார்களாக.
காற்றினால் புகை அடித்துச் செல்லப்படுகிறது போல, நீர் அவர்களை ஊதிவிடும்; நெருப்பின் முன்னே மெழுகு உருகுவது போல, இறைவனுக்கு முன்பாகக் கொடியவர்கள் அழிவார்களாக.
ஆனால் நீதிமான்கள் மகிழ்ந்து இறைவனுக்கு முன்பாகக் களிகூருவார்களாக; அவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்வார்களாக.
இறைவனைப் பாடுங்கள், அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள்; மேகங்களில் ஏறிப் போகிறவரை புகழ்ந்து உயர்த்துங்கள்; யெகோவா என்பது அவருடைய பெயர்; அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
இறைவன் தமது பரிசுத்த வாழ்விடத்தில் தகப்பன் இல்லாதவர்களுக்குத் தகப்பனாகவும் விதவைகளுக்கு பாதுகாவலராகவும் இருக்கிறார்.
இறைவன் தனிமையானவர்களுக்கு குடும்பத்தை ஏற்படுத்துகிறார்; சிறைக் கைதிகளை விடுவித்து, செழிப்பான வாழ்வுக்குள் நடத்திச் செல்கிறார்; கலகக்காரரோ வெயிலால் வறண்ட நாட்டில் வாழ்கிறார்கள்.
இறைவனே, நீர் உமது மக்களுக்கு முன்பாகச் சென்று, அவர்களைப் பாலைவனத்தின் வழியே அணிவகுத்து வருகையில்,
சீனாய் மலையின் இறைவனுக்குமுன், இஸ்ரயேலின் இறைவனுக்குமுன் பூமி அதிர்ந்து, வானங்கள் மழையைப் பொழிந்தன.
இறைவனே, நீர் நிறைவான மழையைக் கொடுத்தீர்; இளைத்துப்போன உமது உரிமைச்சொத்திற்கு நீர் புத்துயிர் அளித்தீர்.
உமது மக்கள் அதில் குடியமர்ந்தார்கள்; இறைவனே, உமது நிறைவான நன்மையிலிருந்து ஏழைகளுக்கு வழங்கினீர்.
யெகோவா வார்த்தையை அறிவித்தார்; அதைப் பிரசித்தப்படுத்தியதோ பெரிய கூட்டம்:
எல்லாம் வல்லவர் நாட்டின் அரசர்களைச் சிதறடித்தது சல்மோன் மலையில் பனிமழை பெய்ததுபோல இருந்தது.
பாசான் மலை இறைவனுடைய மலை; பாசான் மலை சிகரங்களையுடைய மலை.
சிகரங்களையுடைய மலையே, ஏன் சீயோன் மலையின்மேல் பொறாமைப்படுகிறீர்கள்? அங்குதான் இறைவன் தாம் ஆளும்படி விரும்பினார்; அங்குதான் என்றென்றும் யெகோவா குடியிருப்பார்.
இறைவனின் தேர்கள் பத்தாயிரங்களும், ஆயிரம் ஆயிரங்களுமாய் இருக்கின்றன; யெகோவா சீனாய் மலையிலிருந்து அவருடைய பரிசுத்த இடத்திற்கு வந்தார்.
நீர் மேலே ஏறிச்சென்றபோது, சிறைப்பட்ட அநேகரை உம்மோடு எடுத்துச்சென்றீர்; மனிதரிடமிருந்தும் கலகக்காரரிடமிருந்தும் நீர் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டீர்; இறைவனாகிய யெகோவாவின் வாழ்விடம் அதுவே.