உள்ளடக்கத்திற்குச் செல்க
யோவேல் 3:17-21

ஆண்டவர் சீயோனில் என்றென்றும் குடியிருப்பார்

யோவேல் 3:17-21
17
“அப்பொழுது என் பரிசுத்த மலையாகிய சீயோனில் வாழ்கிற உங்கள் இறைவனாகிய யெகோவா நான் என்று அறிவீர்கள். எருசலேம் பரிசுத்தமாயிருக்கும்; பிறநாட்டார் இனி ஒருபோதும் அதைக் கடந்து செல்லமாட்டார்கள்.
18
“அந்நாட்களில் மலைகளில் புதிய திராட்சை இரசம் பொழியும், குன்றுகள் பாலாய் வழிந்தோடும்; யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பியோடும். யெகோவாவின் ஆலயத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பி, சித்தீம் பள்ளத்தாக்கிற்கு தண்ணீர் பாய்ச்சும்.
19
யூதா நாட்டில் குற்றமற்ற இரத்தம் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையின் நிமித்தம் எகிப்து பாழாகும், ஏதோம் பாழடைந்து பாலைவனமாகும்.
20
யூதா என்றென்றும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியிருக்கும் இடமாகும்.
21
அவர்களுடைய இரத்தப்பழியை நான் தண்டியாமல் விடுவேனோ? நான் தண்டிப்பேன்.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options