Skip to content
யோவேல் 3:9-16

தீர்ப்புக்கான மகத்தான ஒன்றுகூடல்

யோவேல் 3:9-16
9
பிற நாடுகளிடையே இதை அறிவியுங்கள்; யுத்தத்திற்குத் தயாராகுங்கள்; இராணுவவீரரை எழுப்புங்கள்; போர்வீரர்கள் அனைவரும் நெருங்கிப்போய் தாக்கட்டும்.
10
உங்கள் மண்வெட்டிகளை வாள்களாகவும், உங்கள் வெட்டுக்கத்திகளை ஈட்டிகளாகவும் அடியுங்கள். பெலவீனன், “நான் பெலனுள்ளவன்!” என்று சொல்லட்டும்.
11
சுற்றுப்புறம் எங்குமுள்ள நாடுகளே, நீங்கள் எல்லோரும் விரைந்துவந்து, அங்கே ஒன்றுகூடுங்கள். யெகோவாவே உமது படைவீரர்களைக் கொண்டுவாரும்!
12
“பிறநாடுகள் எழும்பட்டும்; யோசபாத்தின் பள்ளத்தாக்கை நோக்கி முன்னேறிப் போகட்டும். அங்கே நான், சுற்றுப்புறம் எங்குமுள்ள பிறநாடுகள் அனைத்தையும் நியாயந்தீர்ப்பதற்காக உட்காருவேன்.
13
விளைச்சல் முதிர்ந்துள்ளது, அரிவாளை நீட்டி அறுங்கள். திராட்சைப்பழ ஆலைகள் நிரம்பியுள்ளன, வந்து திராட்சைப் பழங்களை மிதியுங்கள்; இரசத் தொட்டிகளும் நிறைந்து பொங்கி வழிகின்றன; இவ்வளவாய் அவர்களின் கொடுமை பெரியது!”
14
தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் மக்கள் கூட்டங்கூட்டமாய் இருக்கின்றனர். தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் யெகோவாவின் நாள் சமீபித்துள்ளது.
15
சூரியனும் சந்திரனும் இருளடையும், நட்சத்திரங்கள் இனி வெளிச்சம் கொடாதிருக்கும்.
16
யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து முழங்குவார்; வானமும் பூமியும் அதிரும். ஆனால் யெகோவா தம் மக்களுக்குப் புகலிடமும் இஸ்ரயேல் மக்களுக்கு அரணான கோட்டையுமாய் இருப்பார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options