உள்ளடக்கத்திற்குச் செல்க
ஓசியா 10:1-8

இஸ்ரவேலின் செழிப்பும் விக்கிரகாராதனையும்

ஓசியா 10:1-8
1
இஸ்ரயேல் ஒரு படரும் திராட்சைக்கொடி, அவன் தனக்கென கனிகொடுக்கிறது. அவனுடைய கனிகள் பெருகியபோது, அதற்கேற்ற மிகுதியான பலிபீடங்களைக் கட்டினான். அவனுடைய நாடு செழித்தபோது, தனது புனிதக் கற்களை நன்றாக அலங்கரித்தான்.
2
அவர்கள் இருதயம் வஞ்சனையுள்ளது. இப்பொழுது அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும். யெகோவா அவர்களுடைய மேடைகளை இடித்து, புனிதக் கற்களை அழித்துப்போடுவார்.
3
அப்பொழுது அவர்கள், “நாங்கள் யெகோவாவிடம் பயபக்தியாயிருக்காதபடியால், எங்களுக்கு அரசன் இல்லை; அரசன் இருந்தாலுங்கூட, அவனால் எங்களுக்காக என்ன செய்யமுடியும்?” எனச் சொல்வார்கள்.
4
அவர்கள் அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார்கள், பொய் சத்தியங்களையும் ஒப்பந்தங்களையும் செய்கிறார்கள்; எனவே உழுத வயலில் உள்ள நச்சுப் பயிரைப்போல் வழக்குகள் தோன்றுகின்றன.
5
சமாரியாவில் வாழ்கிற மக்கள் பெத்தாவேனில் இருக்கிற கன்றுக்குட்டி விக்கிரகத்திற்குப் பயப்படுகிறார்கள். அது அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு, நாடுகடத்தப்படும். அதன் மக்கள் அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்; அதன் மகிமையில் மகிழ்ச்சிகொண்ட விக்கிரக பூசாரிகளும் துக்கங்கொண்டாடுவார்கள்.
6
அது அசீரியாவின் பேரரசனுக்குக் கப்பமாக அங்கு கொண்டுபோகப்படும். அதைக்குறித்து எப்பிராயீம் அவமானமடையும். இஸ்ரயேல் தன் சொந்த ஆலோசனையினால் வெட்கமடையும்.
7
சமாரியாவும் அதன் அரசனும் தண்ணீரில் மிதக்கும் குச்சியைப்போல் அள்ளுண்டு போவார்கள்.
8
இஸ்ரயேலின் வேறு தெய்வங்களுக்குப் பலியிட்ட மேடைகள் அழிக்கப்படும்; இதுவே இஸ்ரயேலின் பாவம். முட்செடிகளும் நெருஞ்சில்களும் வளர்ந்து அதன் மேடைகளை மூடும். அப்பொழுது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” என்றும், குன்றுகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும் சொல்வார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options