Skip to content

Zin பற்றிய பைபிள் வசனங்கள்

9 வசனங்கள் · 1 அம்சம்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. அவர்கள் போய் சீன் பாலைவனம்தொடங்கி, லேபோ ஆமாத்துக்கு முன்பாக உள்ள ரேகோப் வரையும் நாட்டை ஆராய்ந்து பார்த்தார்கள்.

  2. முதலாம் மாதத்தில் முழு இஸ்ரயேல் சமுதாயமும் சீன் பாலைவனத்தை அடைந்தது. அவர்கள் காதேசில் தங்கினார்கள். அங்கே மிரியாம் இறந்து, அடக்கம்பண்ணப்பட்டாள்.

  3. ஏனென்றால், சீன் பாலைவனத்தின் தண்ணீரின் அருகே இந்த மக்கள் கலகம் பண்ணியபொழுது, அவர்களுக்குமுன் என்னைப் பரிசுத்தர் என்று கனம்பண்ணும்படி உங்களுக்குக் நான் கொடுத்த கட்டளைக்கு நீங்கள் இருவருமே கீழ்ப்படியவில்லை” என்றார். சீன் பாலைவனத்திலுள்ள காதேஸ் என்ற இடத்தில் உண்டான மேரிபாவின் தண்ணீரைப் பற்றியே இது சொல்லப்பட்டது.

  4. எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டு, சீன் பாலைவனத்திலுள்ள காதேசில் முகாமிட்டார்கள்.

  5. “ ‘உங்கள் தென்பகுதி ஏதோமின் எல்லை நெடுகிலும், சீன் பாலைவனத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியிருக்கும். உங்கள் தெற்கு எல்லை கிழக்கே உப்புக்கடலின் முனையிலிருந்து தொடங்கி,

  6. அக்கராபீம் மேடுகளுக்குத் தெற்கில் கடந்துசென்று, சீன் பாலைவனம்வரை போய், பின் காதேஸ் பர்னேயாவின் தெற்கிலே போகும். பின்பு அங்கிருந்து ஆத்சார் அதாருக்குப் போய் அஸ்மோனாவரை செல்லும்.

  7. சீன் பாலைவனத்தில் மேரிபா காதேஷ் தண்ணீர் அருகே இஸ்ரயேலர் முன்னிலையில் நீங்கள் இருவரும் எனக்கு நம்பிக்கையற்றவர்களாய் இருந்தீர்கள். இஸ்ரயேலர் மத்தியிலே நீ எனது பரிசுத்தத்தையும் பேணிக்காத்துக்கொள்ளவில்லை. இதனாலேயே உனக்கு இப்படி நடக்கும்.

  8. வம்சம் வம்சமாக யூதா கோத்திரத்திற்கு அளிக்கப்பட்ட பங்கு தென்பகுதியில் ஏதோம் நாட்டிற்கும், சீன் பாலைவனத்திற்கும் பரந்திருந்தது.

  9. அக்கராபீமின் மேட்டைத் தென்புறமாகக் கடந்து சீன் பாலைவனத்தின் வழியாக, காதேஸ் பர்னேயாவுக்கு தெற்கே சென்றது. பின்பு அது எஸ்ரோன் பக்கமாக ஆதார்வரை போய் வளைந்துசென்று கார்க்காவை அடைந்தது.