உள்ளடக்கத்திற்குச் செல்க

The Law of God பற்றிய பைபிள் வசனங்கள்: Punishment for disobeying

7 வசனங்கள் · 58 அம்சங்கள்

"The Law of God" என்பதைத் தேடு

Punishment for disobeying பற்றிய வசனங்கள்

  1. “நீங்களோ யெகோவாவைவிட்டு, என் பரிசுத்த மலையை மறந்து, காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம் செய்து, மேனி தெய்வத்துக்கு திராட்சை இரசத்தைக் கிண்ணங்களில் நிறைக்கிறீர்கள்.

  2. உங்களை நான் வாளுக்கு இரையாக்குவேன், நீங்கள் எல்லோரும் கொல்லப்படுவதற்கு குனிவீர்கள். ஏனெனில் நான் கூப்பிட்டேன், நீங்கள் பதிலளிக்கவில்லை; நான் பேசினேன், நீங்கள் கேட்கவில்லை. எனது பார்வையில் தீமையைச் செய்து நான் விரும்பாதவற்றைத் தெரிந்துகொண்டீர்கள்.”

  3. ஆகையால் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “எனது ஊழியர்கள் சாப்பிடுவார்கள், நீங்களோ பசியோடிருப்பீர்கள்; எனது ஊழியர்கள் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; எனது ஊழியர்கள் மகிழ்ச்சியாயிருப்பார்கள், நீங்களோ வெட்கத்திற்குள்ளாவீர்கள்.

  4. ஏனெனில், “நான் அவர்களுக்கு முன்பாக வைத்த என் சட்டத்தை அவர்கள் கைவிட்டிருக்கிறார்கள். அவர்கள் எனக்கு கீழ்ப்படியவோ அல்லது எனது சட்டத்தைப் பின்பற்றவோ இல்லை.

  5. அவர்கள் தங்கள் இருதயங்களின் பிடிவாதத்தின்படி நடந்து, தங்கள் முற்பிதாக்கள் போதித்தபடி பாகால்களைப் பின்பற்றினார்கள்” என்றார்.

  6. ஆகையால் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “நான் இந்த மக்களைக் கசப்பான உணவை சாப்பிடவும், நஞ்சு கலந்த தண்ணீரைக் குடிக்கவும் பண்ணுவேன்.

  7. அவர்களோ அவர்களுடைய முற்பிதாக்களோ அறியாத தேசத்தாரின் மத்தியில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முழுவதும் அழித்துத் தீருமட்டும் அவர்களை வாளுடன் துரத்துவேன்.”