Skip to content

Righteousness பற்றிய பைபிள் வசனங்கள்

480 வசனங்கள் · 132 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன், உனது கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் நான் அறிந்திருக்கிறேன். தீயவரை உன்னால் சகிக்க முடியாதிருக்கிறாய். அப்போஸ்தலர் அல்லாதிருந்தும் தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லிக்கொள்பவர்களை நீ சோதித்து, அவர்கள் பொய்யான அப்போஸ்தலர் என்பதை நீ கண்டு கொண்டாய் என்பதையும், நான் அறிந்திருக்கிறேன்.

  2. நீ விடாமல் முயற்சித்து, என்னுடைய பெயருக்காக பாடுகளை அனுபவித்தாய். நீ சலித்துப்போகவே இல்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்.

  3. உன்னுடைய செயல்கள், அன்பு, விசுவாசம், நீ எனக்குச் செய்யும் ஊழியம், உன்னுடைய விடாமுயற்சி, எல்லாவற்றையும் நான் அறிந்திருக்கிறேன். நீ ஆரம்பத்தில் செய்ததைவிட இப்போது அதிகமாய் ஊழியம் செய்கிறதையும் நான் அறிந்திருக்கிறேன்.

  4. பின்பு நான் பரலோகம் திறந்திருப்பதைக் கண்டேன். எனக்கு முன்பாக ஒரு வெள்ளைக்குதிரை இருந்தது. அதன்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவர் என்றும் அழைக்கப்பட்டார். அவர் நீதியுடன் நியாயந்தீர்த்து, யுத்தம் செய்கிறார்.

  5. அது அந்தப் பட்டணத்தின் பிரதான வீதியின் நடுவாக பாய்ந்து ஓடியது. அந்த ஆற்றின் இருபுறமும் ஜீவ மரம் நின்றது. அது மாதம் ஒரு முறையாக, பன்னிரண்டு முறை பழங்களைக் கொடுத்தது. அந்த மரத்தின் இலைகள், மக்களுக்கு சுகம் கொடுப்பதற்கானவை.