Righteousness பற்றிய பைபிள் வசனங்கள்: Shall never be moved
Shall never be moved பற்றிய வசனங்கள்
குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள், நீதியானதைச் செய்கிறவர்கள், உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்;
ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள், குற்றமற்றவர்களுக்கு விரோதமாக இலஞ்சம் வாங்காதவர்கள். இவ்வாறு வாழ்கிறவர்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.
உங்கள் கவலைகளை யெகோவாமேல் வைத்து விடுங்கள்; அவர் உங்களைத் தாங்குவார்; நீதிமான்களை அவர் ஒருபோதும் விழுந்துபோக விடமாட்டார்.
நீதிமான்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை; ஆனால் கொடியவர்கள் நாட்டில் நிலைத்திருக்கமாட்டார்கள்.
தீமையினால் ஒருவரும் நிலைக்கமாட்டார்கள், நீதிமான்களுடைய வேரையோ பிடுங்க முடியாது.