Riches பற்றிய பைபிள் வசனங்கள்: Cannot deliver in the day of God's wrath
Cannot deliver in the day of God's wrath பற்றிய வசனங்கள்
யெகோவாவினுடைய கடுங்கோபத்தின் நாளிலே, அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ அவர்களைக் காப்பாற்றமாட்டாது. அவருடைய வைராக்கியத்தின் நெருப்பினால், முழு உலகமும் சுட்டெரிக்கப்படும். ஏனெனில் அவர் பூமியில் வாழும் யாவருக்கும் திடீரென ஒரு முடிவைக் கொண்டுவருவார்.
அப்பொழுது பூமியில் உள்ள அரசர்களும், இளவரசர்களும், சேனாதிபதிகளும், செல்வந்தர்களும், வலிமையுள்ளவர்களும், ஒவ்வொரு அடிமையும், ஒவ்வொரு சுதந்திரக் குடிமகனும், குகைகளிலும், மலைகளிலுள்ள கற்பாறைகளிலும் ஒளிந்துகொண்டார்கள்.
அவர்கள் அந்த மலைகளையும், கற்பாறைகளையும் பார்த்து, “நீங்கள் எங்கள்மேல் விழுங்கள். அரியணையில் அமர்ந்திருக்கிறவருடைய பார்வையிலிருந்தும், ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்தும், எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்!
அவருடைய கோபத்தின் பெரிதான நாள் வந்துவிட்டது; யாரால் தாங்கமுடியும்?” என்று சொன்னார்கள்.