உள்ளடக்கத்திற்குச் செல்க

Remaliah பற்றிய பைபிள் வசனங்கள்: Father of Pekah, king of Israel.

9 வசனங்கள் · 1 அம்சம்

Father of Pekah, king of Israel. பற்றிய வசனங்கள்

  1. அவனுடைய பிரதான அதிகாரிகளில் ஒருவனான ரெமலியாவின் மகன் பெக்கா இவனுக்கு விரோதமாகச் சதி செய்தான். இவன் கீலேயாத்தைச் சேர்ந்த ஐம்பது பேரைத் தன்னுடன் கூட்டிக்கொண்டுபோய், அர்கோபு, அரியே என்பவர்களோடு பெக்காகியாவை சமாரியாவிலிருந்த அரசனுடைய அரண்மனையில் கொலைசெய்தான். இவ்விதமாக பெக்காகியாவைக் கொன்று அவனுடைய இடத்தில் பெக்கா அரசனானான்.

  2. யூதாவின் அரசனான அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருடத்தில் ரெமலியாவின் மகன் பெக்கா சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். இவன் இருபது வருடங்கள் அங்கே அரசாண்டான்.

  3. இதன்பின் ஏலாவின் மகன் ஓசெயா ரெமலியாவின் மகன் பெக்காவுக்கு விரோதமாகச் சதி செய்தான். அவன் அவனைத் தாக்கிக் கொன்றான். பின்பு உசியாவின் மகன் யோதாம் யூதாவில் அரசாண்ட இருபதாம் வருடத்தில் ஓசெயா இஸ்ரயேலின் அரசனாக வந்தான்.

  4. ரெமலியாவின் மகன் பெக்காவின் ஆட்சியின் பதினேழாம் வருடத்தில், யூதாவின் அரசனான யோதாமின் மகன் ஆகாஸ் அரசாளத் தொடங்கினான்.

  5. அப்பொழுது சீரிய அரசன் ரேத்சீனும் ரெமலியாவின் மகனான இஸ்ரயேலின் அரசன் பெக்காவும் எருசலேமுக்கு எதிராக அணிவகுத்துச் சென்றார்கள். அவர்கள் ஆகாசை சூழ்ந்துகொண்டபோதும், அவனை மேற்கொள்ள முடியவில்லை.

  6. ரெமலியாவின் மகன் பெக்கா என்பவன் யூதாவில் ஒரே நாளில் 1,20,000 வீரர்களைக் கொன்றுபோட்டான். ஏனெனில் யூதா மக்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவை விட்டுவிட்டனர்.

  7. உசியாவின் பேரனும், யோதாமின் மகனுமான ஆகாஸ், யூதாவிலே அரசனாய் இருந்தான். அப்பொழுது, சீரிய அரசன் ரேத்சீனும், இஸ்ரயேல் அரசன் ரெமலியாவின் மகன் பெக்காவும் எருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்தனர். ஆனால் அதை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.

  8. அவனிடம் சொல்லவேண்டியதாவது: ‘பயப்படாதே, குழப்பமடையாமல் கவனமாய் இரு. புகையும் கொள்ளிகளாகிய இந்த சீரியருடன் சேர்ந்த ரேத்சீனினதும், ரெமலியாவின் மகன் பெக்காவினதும் கடுங்கோபத்தினிமித்தம் மனந்தளராதே! ஏனெனில் அவர்கள் இருவரும் வெறும் புகையுங்கொள்ளிகளே.

  9. “இந்த மக்கள், அமைதியாக ஓடும் ஷீலோவாமின் தண்ணீரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ரேத்சீனுக்கும் ரெமலியாவின் மகனுக்கும் என்ன நடக்கும் என்பதில் களிகூர்ந்தார்கள்.