Prayer பற்றிய பைபிள் வசனங்கள்: Praying daily in the morning
Praying daily in the morning பற்றிய வசனங்கள்
யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்; நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து, எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன்.
ஆனாலும் யெகோவாவே, நான் உதவிகேட்டு உம்மை நோக்கிக் கதறுகிறேன்; காலையிலே எனது மன்றாட்டு உமக்கு முன்பாக வருகிறது.
காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும், ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்; நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன்.
யெகோவாவே, எங்கள்மேல் கிருபையாயிரும்; நாங்கள் உமக்குக் காத்திருக்கிறோம். காலைதோறும் எங்கள் பெலனாயும், துயரப்படும் வேளையில் எங்கள் மீட்பருமாயிரும்.