Skip to content

No பற்றிய பைபிள் வசனங்கள்

5 வசனங்கள் · 1 அம்சம்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவதாவது: “நான் தேபேசின் ஆமோன் தெய்வத்தையும், பார்வோனையும், எகிப்தையும், அதன் தெய்வங்களையும், அதன் அரசர்களையும், பார்வோனை நம்பியிருக்கிறவர்களையும் தண்டிக்கப் போகிறேன்.

  2. நான் எகிப்தின் பத்ரோஸைப் பாழாக்கி, சோவானுக்கு நெருப்புமூட்டி, தேபேஸைத் தண்டிப்பேன்.

  3. எகிப்தின் பலத்த கோட்டையான பெலுஷக்யத்தின்மேல், என் கோபத்தை ஊற்றுவேன். தேபேஸ் குடிகளை தண்டிப்பேன்.

  4. நான் எகிப்திற்கு நெருப்பு வைப்பேன்; பெலுஷக்யம் வேதனையால் துடிக்கும்; தேபேஸ் புயலினால் அழிந்துபோகும்! மெம்பிஸ் தொடர்ந்து துன்பத்திலேயே இருக்கும்.

  5. நைல் நதிக்கருகில் அமைந்திருக்கிறதும், நீரால் சூழப்பட்டதுமான நோ அம்மோன் பட்டணத்தைப் பார்க்கிலும், நினிவேயே நீ சிறந்தவளோ? நதியானது நோ அம்மோனுக்குப் பாதுகாப்பாகவும், தண்ணீர் அவளுக்கு மதிலாகவும் இருந்தன.