Murmuring பற்றிய பைபிள் வசனங்கள்: Aaron, &c
Aaron, &c பற்றிய வசனங்கள்
மோசே ஒரு எத்தியோப்பியப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். அந்த எத்தியோப்பியப் பெண்ணின் நிமித்தம் மிரியாமும் ஆரோனும் அவனுக்கு விரோதமாகப் பேசத் தொடங்கினார்கள்.
அவர்கள், “யெகோவா மோசே மூலம் மட்டும்தான் பேசியிருக்கிறாரோ? எங்கள் மூலமாகவும் அவர் பேசவில்லையோ?” என்றார்கள். யெகோவா அதைக் கேட்டார்.
ஆகையால் நான் அவனோடு நேரடியாகவே பேசுகிறேன், புரியாதவிதமாக அல்ல தெளிவாகவே பேசுகிறேன்; அவன் யெகோவாவின் சாயலைக் காண்கிறான். அப்படியிருக்க, என் அடியான் மோசேக்கு விரோதமாய்ப் பேசுவதற்கு நீங்கள் ஏன் பயப்படவில்லை?”