உள்ளடக்கத்திற்குச் செல்க

Church (2) பற்றிய பைபிள் வசனங்கள்: Unclassified scriptures relating to

130 வசனங்கள் · 7 அம்சங்கள்

Unclassified scriptures relating to பற்றிய வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஒரு நதி உண்டு, அதின் நீரோடைகள் மகா உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த இடமான இறைவனின் நகரத்தை மகிழ்ச்சியாக்குகின்றன.

  2. இறைவன் அதற்குள் இருக்கிறார், அது விழுந்து போகாது; அதிகாலையில் இறைவன் அதற்கு உதவி செய்வார்.

  3. கோராகியரின் சங்கீதப் பாட்டு. யெகோவா மிகவும் பெரியவர், நமது இறைவனுடைய நகரத்தில், அவருடைய பரிசுத்த மலையில் அவர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

  4. சீயோன் மலை தன் கம்பீரத்தில் அழகாய், முழு பூமியின் மகிழ்ச்சியாய் இருக்கிறது, வடதிசையின் மிக உயர்ந்த மேடுகளைப் போல இருக்கிற அது மகா அரசரின் நகரம்.

  5. உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம் சீயோன் மலை களிகூருகிறது, யூதாவின் கிராமங்கள் மகிழ்கிறது.

  6. சீயோனைச் சுற்றி உலாவுங்கள்; அதின் கோபுரங்களைக் கணக்கிடுங்கள்.

  7. அவற்றைப்பற்றி அடுத்த தலைமுறைக்கு நீங்கள் சொல்லும்படி, அதின் காவல் அரண்களை நன்றாய் கவனியுங்கள்; கோட்டைப் பட்டணங்களைப் பார்வையிடுங்கள்.

  8. இறைவன் சீயோனை மீட்டு, யூதாவின் பட்டணங்களை மீண்டும் கட்டுவார்; அப்பொழுது அவருடைய மக்கள் அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.

  9. அவருடைய பணியாளரின் பிள்ளைகள் அதை உரிமைச்சொத்தாகப் பெறுவார்கள்; அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அங்கே குடியிருப்பார்கள்.

  10. கித்தீத் என்னும் இசையில் வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, உமது தங்குமிடம் எவ்வளவு அழகானது!

  11. என் ஆத்துமா யெகோவாவினுடைய ஆலய முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கிறது; என் உடலும் உள்ளமும் உயிருள்ள இறைவனை நோக்கி மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறது.

  12. என் அரசரும் என் இறைவனுமாய் இருக்கிற சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, உம்முடைய பீடத்தினருகே அடைக்கலான் குருவிக்கு வீடும், இரட்டைவால் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைத்துக்கொள்ள கூடும் கிடைத்ததே.

  13. உம்முடைய வீட்டில் வசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டே இருப்பார்கள்.

  14. உம்மில் பெலன் கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், தங்கள் உள்ளத்தை சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள்மேல் பதித்துள்ளார்கள்.

  15. அவர்கள் பாக்கா என்னும் வறண்ட பள்ளத்தாக்கைக் கடந்து போகையில், அதை நீரூற்றுகளின் இடமாக்குகிறார்கள்; முன்மாரி மழையும் அதை நீர்நிலைகளால் நிரப்புகின்றது.

  16. அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனின் இறைவனுக்கு முன்பாக வரும்வரைக்கும், பலத்தின்மேல் பலம் அடைகிறார்கள்.

  17. சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; யாக்கோபின் இறைவனே, எனக்குச் செவிகொடும்.

  18. எங்கள் கேடயமாகிய இறைவனே, எங்களை நோக்கிப்பாரும்; நீர் அபிஷேகம் பண்ணியவரின் முகத்தை தயவுடன் பாரும்.

  19. உமது ஆலய முற்றங்களில் ஒரு நாளைக் கழிப்பது, வேறெங்காவது ஆயிரம் நாட்களைக் கழிப்பதைவிட சிறந்தது; கொடியவர்களின் கூடாரங்களில் குடியிருப்பதைவிட, என் இறைவனுடைய வீட்டில் வாசல் காவலனாக இருப்பதை நான் அதிகமாய் விரும்புவேன்.

  20. கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம். யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார்.

  21. யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும், சீயோனின் வாசல்களை நேசிக்கிறார்.

  22. இறைவனின் நகரமே, உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன:

  23. “என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்களோடு நான் ராகாபையும் பாபிலோனையும் குறித்து, ‘இவர்கள் சீயோனிலே பிறந்தவர்கள்’ என்று சொல்வேன்; பெலிஸ்தியாவையும் தீருவையும் எத்தியோப்பியாவையும் குறித்தும் அப்படியே சொல்வேன்.”

  24. உண்மையாகவே சீயோனைக் குறித்து, “இன்னார் இன்னார் அங்கே பிறந்தார்கள் என்றும், மகா உன்னதமானவர் தாமே அதை நிலைநிறுத்துவார்” என்றும் சொல்லப்படும்.

  25. “இன்னார் சீயோனிலே பிறந்தார்” என்பதாக யெகோவா மக்களின் பதிவேட்டில் எழுதுவார்.