உள்ளடக்கத்திற்குச் செல்க

Ambition பற்றிய பைபிள் வசனங்கள்: Vanity of

15 வசனங்கள் · 22 அம்சங்கள்

"Ambition" என்பதைத் தேடு

Vanity of பற்றிய வசனங்கள்

  1. கொடியவர்களின் சந்தோஷம் குறுகியகாலம், இறைவனை மறுதலிக்கிறவனின் மகிழ்ச்சி நொடிப்பொழுது.

  2. இறைவனற்றவனின் பெருமை வானங்களை எட்டினாலும், அவனுடைய தலை மேகங்களைத் தொட்டாலும்,

  3. அவன் உரம் போல அழிந்தே போவான்; அவனை முன்பு கண்டவர்கள், ‘அவன் எங்கே?’ என்று கேட்பார்கள்.

  4. ஒரு கனவைப்போல் அவன் பறந்துபோய், இனி ஒருபோதும் காணப்படமாட்டான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் மறைந்துபோகிறான்.

  5. அவனைப் பார்த்த கண் மீண்டும் அவனைப் பார்க்காது; அவனுடைய இருப்பிடமும் இனி அவனைக் காணாது.

  6. தங்கள் பெயர்களையே அவர்கள் நிலங்களுக்கு வைத்தாலும், அவர்களுடைய கல்லறைகளே என்றென்றைக்கும் அவர்கள் வீடாகவும் முடிவற்ற தலைமுறைகளுக்கு அவர்களுடைய தங்குமிடமாகவும் நிலைத்திருக்கும்.

  7. ஆனாலும் மக்கள் நன்மதிப்பிலே நிலைத்திருக்கிறதில்லை; அவர்கள் அழிந்துபோகும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள்.

  8. தங்களிலேயே நம்பிக்கை வைக்கிறவர்களின் முடிவு இதுவே; இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பின்பற்றுகிறவர்களின் நிலையும் அதுவே.

  9. அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்; மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும். நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்; அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல், கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும்.

  10. ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்; அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார்.

  11. பிறர் செல்வந்தர்களாகி, அவர்கள் வீட்டின் செழிப்பு அதிகரிக்கும்போது, திடுக்கிடாதே;

  12. ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்; அவர்களுடைய செழிப்பும் அவர்களைப் பின்தொடராது.

  13. அவர்கள் உயிரோடிருந்தபோது, தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள். அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள்.

  14. ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே மரிப்பார்கள்; வாழ்வின் ஒளியை இனி ஒருபோதும் காணமாட்டார்கள்.

  15. செல்வந்தராயிருந்தும் அறிவு இல்லாதிருந்தால் அவர்கள் அழிந்துபோகும் மிருகத்தைப் போல் இருக்கிறார்கள்.