ஆதியாகமம் 36:20-30
20
அந்த நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டிருந்த ஓரியரான சேயீரின் மகன்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
21
திஷோன், ஏசேர், திஷான். ஏதோமிலிருந்த சேயீரின் இந்த மகன்கள் ஓரியரின் வம்சத்தலைவர்கள் ஆவர்.
22
லோத்தானின் மகன்கள்: ஓரி, ஓமாம். திம்னாள் லோத்தானின் சகோதரி.
23
சோபாலின் மகன்கள்: அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம்.
24
சிபியோனின் மகன்கள்: அயா, ஆனாகு என்பவர்கள். இந்த ஆனாகுவே, தன் தகப்பன் சிபியோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது, பாலைவனத்திலே வெந்நீரூற்றுக்களைக் கண்டுபிடித்தவன்.
25
ஆனாகின் பிள்ளைகள்: திஷோன், ஆனாகின் மகளான அகோலிபாமாள் என்பவர்கள்.
26
திஷோனுடைய மகன்கள்: எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான் என்பவர்கள்.
27
ஏசேருடைய மகன்கள்: பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.
28
திஷானுடைய மகன்கள். ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
29
ஓரியரின் வம்சத்தலைவர்கள்: லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
30
திஷோன், ஏசேர், திஷான் என்பவர்கள். இவர்கள் சேயீர் நாட்டில் தங்கள் ஓரியர் வம்சப் பிரிவுகளின்படி வம்சத்தலைவர்களாய் இருந்தார்கள்.
Settings