Skip to content

Wool பற்றிய பைபிள் வசனங்கள்: Used for clothing

10 வசனங்கள் · 5 அம்சங்கள்

Used for clothing பற்றிய வசனங்கள்

  1. “ஏதாவது பூஞ்சணத்தினால் உடை கறைப்பட்டால், அதாவது கம்பளியாவது, மென்பட்டு உடையாவது,

  2. மென்பட்டினாலோ கம்பளியினாலோ நெய்யப்பட்ட உடையாவது, தோலாவது, தோலினால் செய்யப்பட்ட ஏதாவது பொருளாவது கறைப்பட்டிருந்தால்,

  3. அந்த உடையிலோ, தோலிலோ, நெய்யப்பட்ட துணியிலோ அல்லது தோலினால் செய்யப்பட்ட பொருளிலோ, உள்ள கறை பச்சையாகவோ, சிவப்பாகவோ இருந்தால் அது பரவும் பூஞ்சணமாகும். அதை ஆசாரியனிடம் காண்பிக்கவேண்டும்.

  4. ஆசாரியன் அந்த பூஞ்சணத்தைப் பரிசோதித்து, பாதிக்கப்பட்ட பொருட்களை ஏழுநாட்களுக்குப் புறம்பாக்கி வைக்கவேண்டும்.

  5. ஏழாம்நாளில் அவன் அதைப் பரிசோதிக்க வேண்டும். உடையிலோ, நெய்யப்பட்ட துணியிலோ, தோலினால் செய்யப்பட்ட பொருட்களிலோ, தோலிலோ அவை எதற்கு பயன்படுத்தப்பட்டாலும் அவற்றில் பூஞ்சணம் படர்ந்திருந்தால், அது அழிவை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சணமாகும். அப்பொருள் அசுத்தமானது.

  6. எனவே ஆசாரியன் கறைப்பட்ட உடையையோ, கம்பளியினால் அல்லது மென்பட்டினால் நெய்யப்பட்டதையோ அல்லது பின்னப்பட்ட உடையையோ, தோல் பொருட்களோ அவைகளை எரிக்கவேண்டும். ஏனெனில், அந்த பூஞ்சணம் அழிவை ஏற்படுத்தக் கூடியது. எனவே அப்பொருள்கள் எரிக்கப்படவேண்டும்.

  7. கம்பளியினால் அல்லது மென்பட்டினாலான உடையோ, நெய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட துணியோ அல்லது ஏதாவது ஒரு தோல் பொருளோ பூஞ்சணத்தினால் கறைப்பிடித்திருந்தால், அவை சுத்தமோ, அசுத்தமோ என தீர்மானிப்பதற்கான விதிமுறைகள் இவைகளே என்றார்.

  8. அவள் கம்பளியையும் சணலையும் தெரிந்தெடுத்து, மிக ஆர்வத்துடன் தன் கைகளினால் வேலை செய்கிறாள்.

  9. நீங்கள் தயிரைச் சாப்பிட்டுக் கம்பளி உடைகளை உடுத்தி, சிறந்த மிருகங்களையும் அடித்துச் சாப்பிடுகிறீர்கள். ஆனால், மந்தையையோ நீங்கள் கவனிக்காது இருக்கிறீர்கள்.

  10. “ ‘உள்முற்ற வாசலுக்குள் அவர்கள் வரும்போது அவர்கள் மென்பட்டு நூல் உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். உள்முற்றநுழைவு வாசலிலோ அல்லது ஆலயத்துக்கு உட்புறத்திலோ ஊழியம் செய்யும்போது அவர்கள் கம்பளி உடைகளை உடுத்தக்கூடாது.