உள்ளடக்கத்திற்குச் செல்க

The Sabbath பற்றிய பைபிள் வசனங்கள்: Punishment of those who profane

7 வசனங்கள் · 63 அம்சங்கள்

Punishment of those who profane பற்றிய வசனங்கள்

  1. “ ‘இந்த ஓய்வுநாள், உங்களுக்குப் பரிசுத்த நாள் என்பதால் அதைக் கைக்கொள்ளுங்கள். அதைத் தூய்மைக்கேடாக்கும் எவனும் கொல்லப்படவேண்டும். அந்த நாளில் வேலைசெய்யும் எவனும் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.

  2. ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும். ஆனால் ஏழாம்நாளோ, யெகோவாவுக்கு பரிசுத்தமான ஓய்வுநாள். இந்த ஓய்வுநாளில் எந்தவித வேலையைச் செய்கிற எவனும் கொல்லப்படவேண்டும்.

  3. இஸ்ரயேலர் பாலைவனத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் ஒரு மனிதன் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தான்.

  4. அவன் விறகு பொறுக்குவதைக் கண்டவர்கள் அவனை மோசேயிடமும், ஆரோனிடமும், சபையார் அனைவரிடமும் கொண்டுவந்தார்கள்.

  5. அவனுக்கு என்ன செய்யப்பட வேண்டுமென்பது தெளிவாய் இல்லாதிருந்ததால், அவனைத் தடுப்புக் காவலில் வைத்தார்கள்.

  6. அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இந்த மனிதன் சாகவேண்டும். அவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய் முழுசபையும் அவன்மேல் கல்லெறிய வேண்டும்” என்றார்.

  7. எனவே, கூடியிருந்த சபையார் அவனை முகாமுக்கு வெளியே கொண்டுவந்து யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.