Rest பற்றிய பைபிள் வசனங்கள்: The annual feasts added rest days
The annual feasts added rest days பற்றிய வசனங்கள்
முதலாம் நாள் நீங்கள் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யவேண்டாம்.
யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை ஏழுநாட்களுக்குக் கொண்டுவர வேண்டும். ஏழாம்நாளில் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது’ ” என்றார்.
அதே நாளில் பரிசுத்த சபைக்கூடுதலை நீங்கள் அறிவிக்கவேண்டும். அந்நாளில் வழக்கமாக நீங்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யவேண்டாம். நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர நியமமாயிருக்கவேண்டும்.
அந்த நாளில் வழக்கமாகச் செய்யும் வேலைகளைச் செய்யாமல் யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை கொண்டுவர வேண்டும்’ ” என்றார்.
அந்த நாளிலே எந்தவொரு வேலையையும் செய்யவேண்டாம். ஏனெனில், அதுவே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவிர்த்தி நாள்.
அந்த நாளில் வேலைசெய்யும் எவனையும், அவனுடைய மக்கள் மத்தியிலிருந்து நான் அழித்துப்போடுவேன்.
நீங்கள் எந்தவொரு வேலையுமே செய்யக்கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் தலைமுறைதோறும் இது உங்களுக்கு ஒரு நிரந்தர நியமமாய் இருக்கவேண்டும்.
முதலாம் நாள் பரிசுத்த சபைக்கூடும் நாள். அந்நாளில் வழக்கமான வேலையொன்றையும் செய்யவேண்டாம்.
யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை ஏழுநாட்களுக்குக் கொண்டுவாருங்கள். எட்டாவது நாள் பரிசுத்த சபையைக் கூட்டி நெருப்பினால் யெகோவாவுக்குக் காணிக்கையைச் செலுத்துங்கள். அதுவே சபைக்கூடுதல் முடிவடையும் நாள். அந்நாளில் வழக்கமாகச் செய்யும் வேலையொன்றையும் செய்யக்கூடாது.
முதலாம் நாள் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யவேண்டாம்.
பண்டிகையின் ஏழாம்நாளில் பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யவேண்டாம்.
“ ‘வாரங்களின் பண்டிகையான அறுவடைப் பண்டிகை காலத்தில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானியத்தை யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்தும் முதற்பலனின் நாளிலே, பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் வழக்கமாக நீங்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யவேண்டாம்.
“ ‘ஏழாம் மாதம் முதலாம்தேதி பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் வழக்கமான வேலை எதையும் செய்யவேண்டாம். அது உங்களுக்கு எக்காளங்களை ஊதும் நாளாயிருக்கிறது.
“ ‘இந்த ஏழாம் மாதத்தின் பத்தாம்நாள் பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் நீங்கள் உங்களை தாழ்மைப்படுத்தி உபவாசிக்கவேண்டும். எந்த வேலையையும் செய்யவேண்டாம்.
“ ‘ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியும் ஒரு பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்நாளில் வழக்கமான வேலை எதையுமே செய்யக்கூடாது. ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகையைக் கொண்டாடவேண்டும்.
“ ‘எட்டாம் நாளில் சபையைக் கூட்டுங்கள். அதில் வழக்கமான வேலை எதையும் செய்யவேண்டாம்.