உள்ளடக்கத்திற்குச் செல்க

Prayer Under Affliction பற்றிய பைபிள் வசனங்கள்: For deliverance

8 வசனங்கள் · 17 அம்சங்கள்

"Prayer Under Affliction" என்பதைத் தேடு

For deliverance பற்றிய வசனங்கள்

  1. என் இருதயத்தின் துயரத்திலிருந்து நீங்கலாக்கும்; என் நெருக்கத்திலிருந்து என்னை விடுவியும்.

  2. இறைவனே, இஸ்ரயேலை அவர்களுடைய துன்பங்கள் எல்லாவற்றிலுமிருந்து மீட்டுக்கொள்ளும்.

  3. உமது வாதையை என்னை விட்டகற்றும்; உமது கரத்தின் தாக்குதலால் நான் இளைத்துப் போனேன்.

  4. யெகோவாவே, எங்களுடன் அளவுக்கதிகமாக கோபங்கொள்ள வேண்டாம்; எங்கள் பாவங்களை என்றென்றும் நினைவுகூரவும் வேண்டாம். உமது மக்களாகிய எங்கள் அனைவரையும் நோக்கிப்பாரும்.

  5. உமது பரிசுத்த பட்டணங்கள் பாலைவனமாகிவிட்டன; சீயோன் பாழ் நிலமானது, எருசலேமும் பாழாய்ப் போயிற்று.

  6. எங்கள் முற்பிதாக்கள் உம்மைத் துதித்த பரிசுத்தமும் மகிமையுமான எங்கள் ஆலயம் நெருப்புக்கு இரையாகி, எங்களுக்கு இன்பமாய் இருந்தவையெல்லாம் பாழாய் கிடக்கின்றன.

  7. யெகோவாவே, இவற்றுக்குப் பின்னும் நீர் ஒன்றுமே செய்யாதிருப்பீரோ? நீர் மவுனமாயிருந்து அளவுக்கதிகமாக எங்களைத் தண்டிக்கப் போகிறீரோ?

  8. யெகோவாவே, என்னைக் குணமாக்கும், நான் குணமாவேன். என்னைக் காப்பாற்றும், நான் காப்பாற்றப்படுவேன். ஏனெனில் நான் துதிக்கிறவர் நீரே.