Skip to content

Or Copper Brass பற்றிய பைபிள் வசனங்கள்

7 வசனங்கள் · 43 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. ஆசாரியன் எலெயாசார் யுத்தத்திற்குப் போன இராணுவவீரர்களிடம் சொன்னதாவது, “யெகோவா மோசேக்குக் கொடுத்த சட்டத்தின்படி செய்யப்பட வேண்டியதாவது:

  2. தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகியவற்றையும்,

  3. நெருப்பினால் எரிந்துபோகாத வேறு எதையும் நெருப்பிலே போடவேண்டும். அப்பொழுது அது சுத்தமாகும். ஆனால் சுத்திகரிக்கும் தண்ணீரினாலும் அது சுத்திகரிக்கப்பட வேண்டும். அத்துடன் நெருப்பினால் எரியக்கூடிய எதையும் அந்த நீரினால் சுத்திகரிக்கவேண்டும்.

  4. கல்தேயர் யெகோவாவின் ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், வெண்கல தண்ணீர் தொட்டியையும் உடைத்து அவைகளிலிருந்த வெண்கலத்தை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

  5. அதோடு ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்ட பானைகளையும், சாம்பல் கரண்டிகளையும், கத்திகளையும், தட்டங்களையும் மற்றும் எல்லா வெண்கலப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு போனார்கள்.

  6. மெய்க்காவல் தளபதி சுத்தத் தங்கத்தினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட தூபகிண்ணங்களையும், தெளிக்கும் பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு போனான்.

  7. யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் செய்த இரண்டு தூண்களிலும், தண்ணீர் தொட்டியிலும், உருளக்கூடிய தாங்கிகளிலும் இருந்த வெண்கலத்தின் எடை, நிறுக்கமுடியாத அளவு அதிகமாயிருந்தன.