Skip to content

Lukewarmness பற்றிய பைபிள் வசனங்கள்: Figurative

12 வசனங்கள் · 1 அம்சம்

Figurative பற்றிய வசனங்கள்

  1. “என் ஆலயம் இடிபாடாய்க் கிடக்கையில் நீங்கள் மட்டும் உங்கள் அலங்காரமான வீடுகளில் வாழும் காலமா இது?”

  2. இப்போதும் சேனைகளின் யெகோவா சொல்கிறதாவது: “உங்களுக்கு நடப்பதைப் பற்றி கவனமாய் யோசித்துப் பாருங்கள்.

  3. நீங்கள் அதிகமாய் விதைத்திருக்கிறீர்கள், மிகக் கொஞ்சமாய் அறுவடை செய்கிறீர்கள்; நீங்கள் சாப்பிடுகிறீர்கள், ஆனால் ஒருபோதும் திருப்தியடைவதில்லை; நீங்கள் குடிக்கிறீர்கள், ஒருபோதும் உங்கள் தாகமோ தீருவதில்லை. உடைகளை உடுத்திக்கொள்கிறீர்கள், என்றாலும் குளிர் உங்களைவிட்டுப் போவதில்லை. நீங்கள் பணத்தைச் சம்பாதிக்கிறீர்கள், ஆனால் அதை ஓட்டையான பைகளிலேயே போடுகிறீர்கள்.”

  4. சேனைகளின் யெகோவா சொல்கிறதாவது: “உங்கள் நடத்தையைப்பற்றி கவனமாய் யோசித்துப் பாருங்கள்.

  5. மலைகளில் ஏறிப்போய் மரங்களை வெட்டிவந்து ஆலயத்தை கட்டுங்கள், அதில் நான் மகிழ்ந்து, நான் கனம்பண்ணப்படுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.

  6. நீங்கள் எதிர்ப்பார்த்ததோ அதிகமான அறுவடை, ஆனால் அது மிகக் கொஞ்சமாக மாறிற்று. நீங்கள் வீட்டிற்கு கொண்டு வந்ததையும் நான் ஊதிவிட்டேன். ஏனென்றால் என் ஆலயம் பாழடைந்து கிடக்கையில் நீங்கள் உங்கள் வீடுகளைப் பற்றியே அதிக கருத்தாய் இருக்கிறீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.

  7. ஆகவே உங்களின் அலட்சியத்தால் வானம் பனியைப் பெய்யாமலும், நிலம் விளைச்சலை கொடுக்காமலும் போயிற்று.

  8. நான் வயலின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புதுத் திராட்சை இரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளையும் எல்லாவற்றின்மேலும், மனிதர்மேலும், மந்தைகள்மேலும், உங்கள் கைகளின் முயற்சிகள்மேலும் வறட்சியை வருவித்தேன்.

  9. “ ‘இப்போதாவது, இதை மிகக் கவனமாய் சிந்தியுங்கள். யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி, அஸ்திபாரம் போட்டும் ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்படும் முன்பு நிலைமை எவ்வாறு இருந்தது என சிந்தித்துப் பாருங்கள்.

  10. இருநூறு கிலோகிராம் தானியக் குவியலுக்கு அருகில் ஒருவன் வந்தபோது, அங்கு பத்து நூறு கிலோகிராம் மட்டுமே இருந்தன. திராட்சை ஆலையின் தொட்டிக்கு ஒருவன் ஐம்பது குடங்கள் திராட்சை இரசம் மொள்ள வந்தபோது, அங்கு இருபது குடங்கள் மட்டுமே இருந்தன.

  11. நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன். நீ குளிராகவும் இல்லை, அனலாகவும் இல்லை. நீ குளிராகவோ அல்லது அனலாகவோ இருப்பதையே நான் விரும்புகிறேன்.

  12. ஆனால் நீயோ அனலுமின்றி, குளிருமின்றி வெதுவெதுப்பாய் இருக்கிறபடியால் நான் உன்னை என்னுடைய வாயிலிருந்து உமிழ்ந்துவிடுவேன்.