Cities பற்றிய பைபிள் வசனங்கள்: Afforded refuge in times of danger
Afforded refuge in times of danger பற்றிய வசனங்கள்
அப்பொழுது மக்கள், நாம் ஒன்றும் செய்யாமல் ஏன் இன்னும் இங்கே இருக்கவேண்டும். வாருங்கள், ஒன்றுசேருவோம். அரணான பட்டணங்களுக்குள் ஓடிப்போய் அங்கே அழிவோம். ஏனெனில், நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியால், அவர் எங்களைப் பேராபத்துக்கு நியமித்திருக்கிறார். அவர் குடிப்பதற்கு நஞ்சு கலந்த தண்ணீரையும் நமக்குத் தந்துள்ளார்.
நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்திருந்தோம். ஒரு நன்மையுமே வரவில்லை. குணமாகும் நேரத்திற்குக் காத்திருந்தோம். ஆனால் ஆபத்து மட்டுமே ஏற்பட்டது.
பகைவரின் குதிரைகளின் சீற்றம், தாணிலிருந்து கேட்கப்படுகிறது. அவர்களின் ஆண் குதிரைகளின் கனைக்கிற சத்தத்தால் நாடு முழுவதும் நடுங்குகிறது. நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும், பட்டணத்தையும், அதிலுள்ள குடிகள் யாவரையும் விழுங்குவதற்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள்.